• May 05 2025

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து!

Chithra / May 5th 2025, 2:17 pm
image


வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை  காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்னொழுக்கினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

தீப் பரவலினால் எக்ஸ்ரே இயந்திரத்தின் உப இயந்திரங்கள் மற்றும் கணினி தொகுதி உட்பட பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியும் முற்றிலுமாக எரிந்து சேதமாகியுள்ளது. 

 தீயணைப்பு வாகனத்தினை இயங்கு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை அண்மைக் காலங்களில் உரிய தரப்பினருடன் இணைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்


வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை  காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மின்னொழுக்கினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. தீப் பரவலினால் எக்ஸ்ரே இயந்திரத்தின் உப இயந்திரங்கள் மற்றும் கணினி தொகுதி உட்பட பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியும் முற்றிலுமாக எரிந்து சேதமாகியுள்ளது.  தீயணைப்பு வாகனத்தினை இயங்கு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை அண்மைக் காலங்களில் உரிய தரப்பினருடன் இணைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Advertisement

Advertisement

Advertisement