வீதியின் நடுவில் முளைத்த மரம் அகற்றப்பட்டு சேதமடைந்த வடிகான் வீதி மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 31 ஆந் திகதி அன்று வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம் என்ற செய்தி ஊடகங்களில் பிரசுரமாகி இருந்தது.
இதற்கமைய செயற்பட்டிருந்த உரிய தரப்பினர் சேதமடைந்த வடிகான் மூடியை சீரமைத்து ஏப்ரல் 7 ஆந் திகதி மறுசீரமைத்து மக்களின் அசௌகரியங்களை நீக்கியுள்ளனர்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது.
தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில் இடப்பட்டுள்ள வடிகான் மூடி சேதமடைந்துள்ளமையினால் குறித்த மரம் முளைத்துள்ளது.
இது தவிர இரவு நேரத்தில் இவ்வீதி இருளில் மூழ்குவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் உரிய அதிகாரிகள் குறித்த மரத்தை அகற்றி வடிகான் மூடியை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருதமுனையில் வீதியின் நடுவில் சேதமடைந்த வடிகான் மறுசீரமைப்பு வீதியின் நடுவில் முளைத்த மரம் அகற்றப்பட்டு சேதமடைந்த வடிகான் வீதி மறுசீரமைக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 31 ஆந் திகதி அன்று வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம் என்ற செய்தி ஊடகங்களில் பிரசுரமாகி இருந்தது.இதற்கமைய செயற்பட்டிருந்த உரிய தரப்பினர் சேதமடைந்த வடிகான் மூடியை சீரமைத்து ஏப்ரல் 7 ஆந் திகதி மறுசீரமைத்து மக்களின் அசௌகரியங்களை நீக்கியுள்ளனர்.கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது.தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில் இடப்பட்டுள்ள வடிகான் மூடி சேதமடைந்துள்ளமையினால் குறித்த மரம் முளைத்துள்ளது.இது தவிர இரவு நேரத்தில் இவ்வீதி இருளில் மூழ்குவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் உரிய அதிகாரிகள் குறித்த மரத்தை அகற்றி வடிகான் மூடியை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.