• May 20 2025

மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு

Chithra / May 20th 2025, 3:43 pm
image

 

ஒரு தொகுதி கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மந்துறை காவல் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகை இடப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

தகவல் ஒன்றினை அடுத்து சம்மாந்துறை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மல்வத்தை பகுதி ஆற்றங்கரை அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை பொருட்களை மீட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட பொருட்களில் 2 பரள் கோடா, பழ வகைகள், கொள்கலன்கள் என்பன உள்ளடங்குவதுடன் பொருட்கள் யாவும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சட்ட நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.


மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு  ஒரு தொகுதி கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மந்துறை காவல் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகை இடப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.தகவல் ஒன்றினை அடுத்து சம்மாந்துறை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மல்வத்தை பகுதி ஆற்றங்கரை அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதேவேளை பொருட்களை மீட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் மீட்கப்பட்ட பொருட்களில் 2 பரள் கோடா, பழ வகைகள், கொள்கலன்கள் என்பன உள்ளடங்குவதுடன் பொருட்கள் யாவும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சட்ட நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement