நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் இன்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் மற்றும் போகம்பர பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்க அணையின் 04 கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை,பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை: வெள்ளத்தில் மூழ்கிய கண்டி நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கண்டியில் இன்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் மற்றும் போகம்பர பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்க அணையின் 04 கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.மத்திய மலைநாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இடியுடன் கூடிய மழை,பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.