• Nov 23 2024

பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு - இலங்கை மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Chithra / Jun 27th 2024, 7:35 am
image

 

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரபிக்கடலில் செயற்படும் நெடுநாள் படகு மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரையும் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும்,  திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள்  மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு - இலங்கை மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை  பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அரபிக்கடலில் செயற்படும் நெடுநாள் படகு மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரையும் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அப்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும்,  திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள்  மழை பெய்யக்கூடும்.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement