சர்வஜன வாக்கெடுப்பு என்பது மக்களை குழப்புவதற்கான விடயம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ள ஊடக வியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று மக்களுக்கு மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு இரண்டு வருடங்கள் ஜனாதிபதி நீடிக்கும் விடயமும் வேண்டும் என்று மக்களை குழப்புவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள விடயமாகத்தான் நான் காண்கின்றேன்.
ஜனாதிபதி தேர்தலாக இருக்கட்டும், பாராளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் இதை முகம் கொடுப்பதற்கு ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிக்கும் ஐக்கிய தேசிய கட்சியும் ஜனாதிபதியும் ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு நிச்சயமாக போகப்போவதில்லை.
பொது ஜன பெரமுன கூட தங்கள் தேர்தலை பிற் போடுவதற்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சொல்லியிருக்கின்றார்.
சர்வஜன வாக்கெடுப்பு என்பது மக்களை குழப்புவதற்கான விடயமாகத்தான் நான் காண்கிறேன். ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வெல்ல முடியும் என்ற மாத்திரம் தான் இவர் களமிறங்குவார். இவருடைய சரித்திரத்தில் அப்படிதான் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக அவருக்கு பெரிய ஒரு விருப்பம் இருக்கின்றதாக அவருக்கு தெரிய வில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷவிடம் இது சம்பந்தமாக கேட்ட பொழுது அதற்கு அவரினுடைய விருப்பத்தை தெரிவிக்கவில்லை. இவர் அரசியல் யாப்பில் 83 ஆவது சாரத்தில் இருக்கின்ற ஒரு வருட நீடிப்பு அல்லது பாராளுமன்ற பதவிக்காலமும் ஜனாதிபதிப்பதவிக்காலமும் முன்னாள் இருந்த வகையில் 6 வருட காலம் வைத்துக்கொள்வதற்கு 2/3 பெரும்பான்மை சர்வஜன வாக்குரிமை தேவையில்லை என்ற நிலைப்பாடு இருக்கின்றது.
இதைத்தான் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சொல்லியிருந்தார்கள். மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவும் சொல்லியிருந்தார். ஆனால் எங்களை பொறுத்த வரையில் சில நேரங்களில் எந்த ஒரு தேர்தலையும் முகம் கொடுக்காமல் இன்னொரு காலத்தையும் அவருடைய காலத்தையும் பாராளுமன்றத்துக்கு இன்னொரு வருடத்தையும் கூட்டி பாராளுமன்றத்தில் 2/3 வாக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு செய்ய முடியும் என்று யோசிக்கலாம்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை பொறுத்த வரை நாங்கள் அதனை எதிர்ப்போம். ஏனென்றால் 23 ஆவது சாரத்தில் ஆறு வருடத்துக்கு மேலாக நீடிப்பதற்கு மாத்திரம் தான் சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்று சொல்லியிருந்தாலும் கூட மக்கள் ஆணை ஐந்து வருடம் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அதை ஆறு வருடம் ஆக்குவதற்கு சர்வஜன வாக்க்கெடுப்பு தேவை என்ற நிலைப்பாட்டை நாங்கள் உச்ச நீ உச்ச நீதிமன்றத்தில் எடுப்போம்.
ஜனநாயகத்துக்கு தேவையான மசோதாவை யார் யார் ஆதரிக்கிறார்களோ அவர்களை மக்கள் வெறுக்க போகின்றார்கள். மக்கள் இதற்கு எதிராக திரளுவார்கள் என்று நம்புகின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பு என்பது மக்களை குழப்புவதற்கான விடயமே -அதனை நாம் எதிர்ப்போம் - நிசாம் காரியப்பர் தெரிவிப்பு. சர்வஜன வாக்கெடுப்பு என்பது மக்களை குழப்புவதற்கான விடயம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ள ஊடக வியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று மக்களுக்கு மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு இரண்டு வருடங்கள் ஜனாதிபதி நீடிக்கும் விடயமும் வேண்டும் என்று மக்களை குழப்புவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள விடயமாகத்தான் நான் காண்கின்றேன். ஜனாதிபதி தேர்தலாக இருக்கட்டும், பாராளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் இதை முகம் கொடுப்பதற்கு ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிக்கும் ஐக்கிய தேசிய கட்சியும் ஜனாதிபதியும் ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு நிச்சயமாக போகப்போவதில்லை. பொது ஜன பெரமுன கூட தங்கள் தேர்தலை பிற் போடுவதற்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சொல்லியிருக்கின்றார். சர்வஜன வாக்கெடுப்பு என்பது மக்களை குழப்புவதற்கான விடயமாகத்தான் நான் காண்கிறேன். ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வெல்ல முடியும் என்ற மாத்திரம் தான் இவர் களமிறங்குவார். இவருடைய சரித்திரத்தில் அப்படிதான் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக அவருக்கு பெரிய ஒரு விருப்பம் இருக்கின்றதாக அவருக்கு தெரிய வில்லை. பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷவிடம் இது சம்பந்தமாக கேட்ட பொழுது அதற்கு அவரினுடைய விருப்பத்தை தெரிவிக்கவில்லை. இவர் அரசியல் யாப்பில் 83 ஆவது சாரத்தில் இருக்கின்ற ஒரு வருட நீடிப்பு அல்லது பாராளுமன்ற பதவிக்காலமும் ஜனாதிபதிப்பதவிக்காலமும் முன்னாள் இருந்த வகையில் 6 வருட காலம் வைத்துக்கொள்வதற்கு 2/3 பெரும்பான்மை சர்வஜன வாக்குரிமை தேவையில்லை என்ற நிலைப்பாடு இருக்கின்றது. இதைத்தான் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சொல்லியிருந்தார்கள். மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவும் சொல்லியிருந்தார். ஆனால் எங்களை பொறுத்த வரையில் சில நேரங்களில் எந்த ஒரு தேர்தலையும் முகம் கொடுக்காமல் இன்னொரு காலத்தையும் அவருடைய காலத்தையும் பாராளுமன்றத்துக்கு இன்னொரு வருடத்தையும் கூட்டி பாராளுமன்றத்தில் 2/3 வாக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு செய்ய முடியும் என்று யோசிக்கலாம். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை பொறுத்த வரை நாங்கள் அதனை எதிர்ப்போம். ஏனென்றால் 23 ஆவது சாரத்தில் ஆறு வருடத்துக்கு மேலாக நீடிப்பதற்கு மாத்திரம் தான் சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்று சொல்லியிருந்தாலும் கூட மக்கள் ஆணை ஐந்து வருடம் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அதை ஆறு வருடம் ஆக்குவதற்கு சர்வஜன வாக்க்கெடுப்பு தேவை என்ற நிலைப்பாட்டை நாங்கள் உச்ச நீ உச்ச நீதிமன்றத்தில் எடுப்போம். ஜனநாயகத்துக்கு தேவையான மசோதாவை யார் யார் ஆதரிக்கிறார்களோ அவர்களை மக்கள் வெறுக்க போகின்றார்கள். மக்கள் இதற்கு எதிராக திரளுவார்கள் என்று நம்புகின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.