• Mar 28 2026

ஆட்பதிவுத் திணைக்கள சேவை முடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Chithra / Mar 27th 2026, 2:29 pm
image

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு செயலிழந்துள்ள நிலையில், ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இன்று பெருமளவிலான மக்கள் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர்.


கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மறு அறிவித்தல் வரை சேவைகள் நிறுத்தப்படுவதாக நேற்று வியாழக்கிழமை (26) அறிவிக்கப்பட்டிருந்தது. 


எனினும், இன்று காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.


கடந்த செவ்வாய்க்கிழமை வருகை தந்து தமது பணிகளை முடிக்க முடியாமல் போன பலர் இன்றும் வருகை தந்துள்ளனர்.


குறிப்பாக, வெள்ளம் காரணமாக அடையாள அட்டைகளை இழந்த பாடசாலை மாணவர்கள் பலர் இன்றும் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ள நிலையில்,

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அடையாள அட்டை கட்டாயம் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

ஆட்பதிவுத் திணைக்கள சேவை முடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு செயலிழந்துள்ள நிலையில், ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இன்று பெருமளவிலான மக்கள் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர்.கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மறு அறிவித்தல் வரை சேவைகள் நிறுத்தப்படுவதாக நேற்று வியாழக்கிழமை (26) அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.கடந்த செவ்வாய்க்கிழமை வருகை தந்து தமது பணிகளை முடிக்க முடியாமல் போன பலர் இன்றும் வருகை தந்துள்ளனர்.குறிப்பாக, வெள்ளம் காரணமாக அடையாள அட்டைகளை இழந்த பாடசாலை மாணவர்கள் பலர் இன்றும் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ள நிலையில்,எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அடையாள அட்டை கட்டாயம் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement