• Nov 24 2024

மருத்துவ உதவிகளால் மறுவாழ்வளிக்கும் ஈழத்தமிழன்...! கோடிக்கணக்கில் ஈழத்துக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்...!

Sharmi / Feb 28th 2024, 1:54 pm
image

மருத்துவ உதவிகளால் மறுவாழ்வளிக்கும் “மின்னல்” இசை நிகழ்ச்சி புகழ் செந்தில்குமரன், 'நிவாரணம்' அமைப்பின் ஊடாக தாயகத்தில் பல்வேறுபட்ட மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார். 

குறிப்பாக, வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். 

அந்தவகையில், தமது பணிக்கு உதவுபவர்களை வாழ்த்தி நன்றி தெரிவிக்கும் நிகழ்வு அண்மையில்  கனடாவிலுள்ள Petit Delight என்ற உணவுச்சாலையில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் உரையாற்றிய செந்தில்குமரன், 

தன் தாயகப் பணித் திட்டங்களிற்கு மனப்பூர்வமாக ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்களுக்கு நன்றி கூறியதுடன், அண்மையில் தான் நிகழ்த்திய MGR 107 இசை நிகழ்ச்சியில் 212,807.19  டொலர் சேகரிக்கப்பட்டதாக அறிவித்தார். 

அந்த வகையில் குறித்த நிதியிலிருந்து, யாழ்ப்பாண மருத்துவமனையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவிற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் TOE இயந்திரம், சாவகச்சேரி மருத்துமனைக்கு அவசரம் தேவைப்படும் 2 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள், போன்றவற்றை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும், தாயகத்தில் உயிருக்கு போராடும் இளம் சிறார்களின் சத்திர சிகிச்சையினை ஒழுங்கு செய்வதுடன், கடும் சிறுநீரக பாதிப்பால் அவதியுறும் நோயாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 

கடந்த பல காலமாக தன் கடும் முயற்சியினால் தன் இசை நிகழ்வுகளின் ஊடாக, அதுவும் குறிப்பாக உள்ளூர் கலைஞர்களை வைத்தே நடாத்தியதனூடாக, பெரும் நிதியினை திரட்டி ஈழத்தில் பாரிய இதய சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்திருந்தார். 

இதய சத்திர சிகிச்சைகள் மட்டுமல்லாது தமிழர் தாயகத்தில் வைத்தியசாலைக்கு தேவைப்படும் முக்கிய உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதன் மூலம், அதுவும் சிறுநீரக நோயின் நிலை முற்றி, உயிர் வாழ குருதி சுத்திகரிப்பு செய்ய  வேண்டும் என்ற நிலையிலுள்ள நோயாளிகள் வாழும் பகுதிகளை இனம் கண்டு, அவர்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே அரச வைத்திய சாலைகளில் குருதி சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்துள்ளதோடு, வறுமை கோட்டின் கீழுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கி வருவதாக குறித்த நிவாரணம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.




மருத்துவ உதவிகளால் மறுவாழ்வளிக்கும் ஈழத்தமிழன். கோடிக்கணக்கில் ஈழத்துக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம். மருத்துவ உதவிகளால் மறுவாழ்வளிக்கும் “மின்னல்” இசை நிகழ்ச்சி புகழ் செந்தில்குமரன், 'நிவாரணம்' அமைப்பின் ஊடாக தாயகத்தில் பல்வேறுபட்ட மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார். குறிப்பாக, வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். அந்தவகையில், தமது பணிக்கு உதவுபவர்களை வாழ்த்தி நன்றி தெரிவிக்கும் நிகழ்வு அண்மையில்  கனடாவிலுள்ள Petit Delight என்ற உணவுச்சாலையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய செந்தில்குமரன், தன் தாயகப் பணித் திட்டங்களிற்கு மனப்பூர்வமாக ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்களுக்கு நன்றி கூறியதுடன், அண்மையில் தான் நிகழ்த்திய MGR 107 இசை நிகழ்ச்சியில் 212,807.19  டொலர் சேகரிக்கப்பட்டதாக அறிவித்தார். அந்த வகையில் குறித்த நிதியிலிருந்து, யாழ்ப்பாண மருத்துவமனையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவிற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் TOE இயந்திரம், சாவகச்சேரி மருத்துமனைக்கு அவசரம் தேவைப்படும் 2 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள், போன்றவற்றை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும், தாயகத்தில் உயிருக்கு போராடும் இளம் சிறார்களின் சத்திர சிகிச்சையினை ஒழுங்கு செய்வதுடன், கடும் சிறுநீரக பாதிப்பால் அவதியுறும் நோயாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த பல காலமாக தன் கடும் முயற்சியினால் தன் இசை நிகழ்வுகளின் ஊடாக, அதுவும் குறிப்பாக உள்ளூர் கலைஞர்களை வைத்தே நடாத்தியதனூடாக, பெரும் நிதியினை திரட்டி ஈழத்தில் பாரிய இதய சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்திருந்தார். இதய சத்திர சிகிச்சைகள் மட்டுமல்லாது தமிழர் தாயகத்தில் வைத்தியசாலைக்கு தேவைப்படும் முக்கிய உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதன் மூலம், அதுவும் சிறுநீரக நோயின் நிலை முற்றி, உயிர் வாழ குருதி சுத்திகரிப்பு செய்ய  வேண்டும் என்ற நிலையிலுள்ள நோயாளிகள் வாழும் பகுதிகளை இனம் கண்டு, அவர்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே அரச வைத்திய சாலைகளில் குருதி சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்துள்ளதோடு, வறுமை கோட்டின் கீழுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கி வருவதாக குறித்த நிவாரணம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement