• Sep 09 2024

ஏழு ஆண்டுகளாக நீதிக்காக போராடும் உறவுகள்....! வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு...!samugammedia

Sharmi / Jan 23rd 2024, 3:01 pm
image

Advertisement

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது  உறவுகளுக்கு நீதி கோரி வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2529 வது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்  இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் எமது உறவுகள் வேண்டும் , உறவுகளை மீட்க சர்வதேசம் வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 நிமிடங்களாக இடம்பெற்ற இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் 30க்கு மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


ஏழு ஆண்டுகளாக நீதிக்காக போராடும் உறவுகள். வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.samugammedia வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது  உறவுகளுக்கு நீதி கோரி வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2529 வது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்  இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே வேண்டும் வேண்டும் எமது உறவுகள் வேண்டும் , உறவுகளை மீட்க சர்வதேசம் வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 30 நிமிடங்களாக இடம்பெற்ற இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் 30க்கு மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement