• Sep 19 2024

வேலன் சுவாமிகளின் கைதுக்கு வலிந்து காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கண்டணம்

Chithra / Jan 24th 2023, 8:10 am
image

Advertisement

தவத்திரு வேலன் சுவாமி அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழின அழிப்பை நடத்திவந்த சிங்கள அரசுகளுள் நன்கு திட்டமிட்டு சர்வதேச சாட்சிகளை அழித்து உச்சகட்ட இனவழிப்பை நடத்தி முடித்த ராஜபக்ச குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் தைப்பொங்கள் தினமான 15/01/2023 அன்று பொங்கல் நிகழ்வு ஒன்றினை நடத்தி தமிழ் மக்களை மட்டுமன்றி சர்வதேசத்தையும் ஏமாற்றி தனது நரித்தனத்தை காட்ட முற்பட்டார்.

தேசிய பொங்கல் விழா எனும் பெயரில், எமது பிள்ளைகளையும் எமது உறவுகளையும் காணாமல் ஆக்கிய இராணுவ அதிகாரிகளையே கொண்டு மங்கள விளக்கேற்றியே இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தி இருந்தனர். இவை அனைத்துக்கும் எதிர்ப்பை காட்டும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பொது

மக்களினால் தைப்பொங்கல் தினமான 15/01/2023 அன்று ஐனநாயக முறையில் முகமாக எதிர்ப்பு பேரணி ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றது.

ஐனநாயக முறையில் நடைபெற்ற அந்த பேரணியை சிங்கள அரசானது தனது பொலிசார்,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரை வைத்து மிகவும் மிலேச்சத்தனமாக அடக்கியுள்ளனர். 

தமது உறவுகளை இதே சிங்கள அரசிடம் ஒப்படைத்து விட்டு இன்று 2200 நாட்களுக்கு மேலாக தமது உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார்கள், இளம் பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொது மக்கள் என எந்த வேறுபாடுமின்றி இந்த சிங்கள அரசானது அவர்களின் அமைதியான ஜனநாயக முறையில் மேற்கொண்ட பேரணியை கம்பிவேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தியதோடு பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது தனது அடாவடி படைகளை வைத்து மிகவும் மிலேச்சத்தனமாக நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இவை மட்டுமின்றி சப்பாத்து கால்களால் மிதித்தும், முழங்கால்களால் இடித்தும், கைவிரல்களால் கீறியும் காயப்படுத்தி தாக்கியுள்ளனர். 

இத்தாக்குதலில், பல காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் தாய்மார்கள் கண்களிலும், உடலிலும் உபாதைகள் ஏற்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 

அதேபோல் இப்பேரணியில் கலந்து கொண்ட தவத்திரு வேலன் சுவாமிகளும், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாகவேதான் எமது தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேறும் படி தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.சரியான ஜனநாயகத்தை பேணும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்ட படைகளை தண்டித்திருக்க வேண்டும். ஆனால் ஜனநாயக வரம்பை மீறி ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது படைகளை வைத்து பாதிக்கப்பட்டவர்களை கைது செய்துள்ளார்கள், விசாரணை செய்கின்றார்கள். 

இதில் மதத்தலைவரும், மக்களின் உரிமை போராட்டங்களின் தொடர்ந்தும் முன்னிற்கும் தவத்திரு வேலன் சுவாமி அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அத்துடன் சிங்கள அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகளை தேடி வரும் நாம் எமது எதிர்ப்பை ஜனநாயக முறையில் காட்ட முற்பட்டமையை தடுத்தும், பொறுப்பற்ற முறையில் பொய்யுரைத்து, எம்மை ஏமாற்றியதையும், மூர்க்கமாக எம்மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு அடக்குமுறையை மேற்கொண்டதையும், கைது செய்து விசாரணை செய்வதையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதே நேரம் அனைத்து மக்களும் எந்த வித வேறுபாடும் இன்றி இச்சம்பவத்தை கண்டிப்பதுடன்,எம்முடன் இணைந்து எமது உறவுகளை தேடும் எம் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றோம் என்றுள்ளது.

வேலன் சுவாமிகளின் கைதுக்கு வலிந்து காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கண்டணம் தவத்திரு வேலன் சுவாமி அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில்,இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழின அழிப்பை நடத்திவந்த சிங்கள அரசுகளுள் நன்கு திட்டமிட்டு சர்வதேச சாட்சிகளை அழித்து உச்சகட்ட இனவழிப்பை நடத்தி முடித்த ராஜபக்ச குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் தைப்பொங்கள் தினமான 15/01/2023 அன்று பொங்கல் நிகழ்வு ஒன்றினை நடத்தி தமிழ் மக்களை மட்டுமன்றி சர்வதேசத்தையும் ஏமாற்றி தனது நரித்தனத்தை காட்ட முற்பட்டார்.தேசிய பொங்கல் விழா எனும் பெயரில், எமது பிள்ளைகளையும் எமது உறவுகளையும் காணாமல் ஆக்கிய இராணுவ அதிகாரிகளையே கொண்டு மங்கள விளக்கேற்றியே இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தி இருந்தனர். இவை அனைத்துக்கும் எதிர்ப்பை காட்டும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களினால் தைப்பொங்கல் தினமான 15/01/2023 அன்று ஐனநாயக முறையில் முகமாக எதிர்ப்பு பேரணி ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றது.ஐனநாயக முறையில் நடைபெற்ற அந்த பேரணியை சிங்கள அரசானது தனது பொலிசார்,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரை வைத்து மிகவும் மிலேச்சத்தனமாக அடக்கியுள்ளனர். தமது உறவுகளை இதே சிங்கள அரசிடம் ஒப்படைத்து விட்டு இன்று 2200 நாட்களுக்கு மேலாக தமது உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார்கள், இளம் பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொது மக்கள் என எந்த வேறுபாடுமின்றி இந்த சிங்கள அரசானது அவர்களின் அமைதியான ஜனநாயக முறையில் மேற்கொண்ட பேரணியை கம்பிவேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தியதோடு பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது தனது அடாவடி படைகளை வைத்து மிகவும் மிலேச்சத்தனமாக நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இவை மட்டுமின்றி சப்பாத்து கால்களால் மிதித்தும், முழங்கால்களால் இடித்தும், கைவிரல்களால் கீறியும் காயப்படுத்தி தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில், பல காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் தாய்மார்கள் கண்களிலும், உடலிலும் உபாதைகள் ஏற்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதேபோல் இப்பேரணியில் கலந்து கொண்ட தவத்திரு வேலன் சுவாமிகளும், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதன் காரணமாகவேதான் எமது தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேறும் படி தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.சரியான ஜனநாயகத்தை பேணும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்ட படைகளை தண்டித்திருக்க வேண்டும். ஆனால் ஜனநாயக வரம்பை மீறி ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது படைகளை வைத்து பாதிக்கப்பட்டவர்களை கைது செய்துள்ளார்கள், விசாரணை செய்கின்றார்கள். இதில் மதத்தலைவரும், மக்களின் உரிமை போராட்டங்களின் தொடர்ந்தும் முன்னிற்கும் தவத்திரு வேலன் சுவாமி அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்.அத்துடன் சிங்கள அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகளை தேடி வரும் நாம் எமது எதிர்ப்பை ஜனநாயக முறையில் காட்ட முற்பட்டமையை தடுத்தும், பொறுப்பற்ற முறையில் பொய்யுரைத்து, எம்மை ஏமாற்றியதையும், மூர்க்கமாக எம்மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு அடக்குமுறையை மேற்கொண்டதையும், கைது செய்து விசாரணை செய்வதையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.அதே நேரம் அனைத்து மக்களும் எந்த வித வேறுபாடும் இன்றி இச்சம்பவத்தை கண்டிப்பதுடன்,எம்முடன் இணைந்து எமது உறவுகளை தேடும் எம் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றோம் என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement