• Nov 28 2024

சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்- அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை..!

Sharmi / Sep 25th 2024, 8:47 am
image

மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்றையதினம்(25) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் கடந்த கால அரசியல், பொருளாதார, அபிவிருத்தி, சமூக நல பொது சேவைகள் அது தொடர்பான கொள்கைகள், கட்டமைப்புகள் என்பவற்றோடு அரசியல் கலாச்சாரத்தையும் அரசியல் அரச இயந்திரத்தையும் "சுத்த கரண்ன ஓனே" (தூய்மைப்படுத்த வேண்டும்" எனும் மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுர குமார அவர்களின் குரலைக் கேட்டு பெருந்தொகையான வாக்குகளால் மக்கள் அவரை நாட்டில் தலைவராக்கி கௌரவப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் அனைத்து மக்களின் ஜனாதிபதியான அவரை வாழ்த்துவதோடு; கடந்த 75 வருட காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு பல இன கலவரங்களுக்கும், இன அழிப்பிற்கும், இனப்படுகொலைக்கும் உள்ளாகி தொடர்ந்தும் இன அழிப்பினை அனுபவித்துக் கொண்டிருக்கிற தமிழர்களாகிய நாங்களும் கூறுகின்றோம் "தூய்மைப்படுத்த வேண்டும்" அதனையும் செவிமடுத்தால் ஒரே நாட்டில் இரு தேச மக்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சிக்கண்டு ஒரே மக்கள் சக்தியாக எம்மை அடிமைப்படுத்த நினைக்கும் வல்லரசுகளுக்கும் இணைந்தே முகம் கொடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வரலாற்றில் மக்கள் விடுதலை முன்னணி வடகிழக்கு தமிழர்களுக்கு எதிராகவும், மலையகத் தமிழர்களுக்கு எதிராகவும் மேற்கொண்ட அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

யுத்த கொடூரத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் மட்டுமல்ல இன்று முழு நாடாக மக்கள் அனுபவிக்கும் பொருளாதார துன்பங்களுக்கும் உங்கள் அமைப்பும் காரணமாகும். 

அதனால் உங்கள் மீதுள்ள நம்பிக்கையீனத்திற்கும் காரணமானவைகளை தூய்மைப்படுத்தி எமது நம்பிக்கைக்கும் பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் தமிழர்களாகி எம் மீது பெரும்பான்மை சமூகம் கொண்டிருக்கும் அரசியல் கலாச்சாரம் தொடர்ந்து தற்போதைய நிலையிலேயே இருக்குமானால் நாடு பிளவு படுவது மட்டுமல்ல தங்களுடைய காலத்திலும் அந்நிய சக்திகளின் ஆதிக்கம் அதிகரிப்பதோடு தங்களை பதவியில் அமர்த்தியவர்களே தங்களுக்கு எதிராக கிளர்ந்தெழலாம்.

இதனை சுத்தப்படுத்தி இனங்களின் அடையாளங்களை பாதுகாத்து முன்னோக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

ஆதலால் எமது பார்வையில் இந்நாட்டில் நீண்ட கால வரலாற்றையும் கலாச்சார பாரம்பரியங்களை கொண்ட தமிழ் மக்களாகிய நாம் பொருளாதாரத்திற்கும், அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டுமானங்களுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பங்களித்துள்ள மக்களாக நாம் முன்வைக்கும் எமது அரசியல் அபிலாசைகளுக்கு அரசியல் தெளிவோடு, புரிதலோடு, நம்பிக்கையோடு, பயமின்றி செவிமடுத்து அதனை நடைமுறைபடுத்தி எம்மோடு இணைந்து பயணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே, நீங்கள் பிரித்த வடக்கையும் கிழக்கையும் மீள இணைத்து அதனை தமிழர் தாயகமாக ஏற்று அதன் அடிப்படையில் அரசியல் தீர்வுக்கு வழி வகுப்போம்.

இதற்கு முன்னர் நாம் சிங்கள பௌத்த திணைக்களங்களாக அடையாளப்படுத்தும் தொல்லியல் திணைக்களம், வனவளங்கள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை என்பவற்றின் சிங்கள பௌத்த ஆதிக்க ஆக்கிரமிப்பு மற்றும் இன அழிப்பு செயற்பாடுகளை தடுத்து அவ் அரச கட்டமைப்புகளை தூய்மைப்படுத்தி எமது சமய, மொழி, கலை,கலாச்சார பாரம்பரியங்களை காக்குமாறும் எமது தாயக பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ வழி விடுமாறும் கேட்கின்றோம்.

சிங்கள பௌத்த ஆதிக்க மனப்பான்மையோடு எமது விருப்பிற்கு நேர் மாறாகவும், பலவந்தமாகவும் அரசு காணிகளிலும், தனியார் காணிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பௌத்த சின்னங்களை எமது மண்ணிலிருந்து அகற்றி தூய்மை படுத்துங்கள்.

அத்தோடு எமது இன பரம்பலையும் இருப்பையும் சிதைக்கவும், சிங்கள பௌத்த அரசியல் அதிகாரத்தை விரிவு படுத்தவுமென கடந்த 75 வருட காலமாக முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த குடியேற்றங்களை தடுத்து நிறுத்துமாறும் கூறுகின்றோம். அவ்வாறான குடியேற்றங்கள் தனி சிங்கள குடியேற்றங்கள் தமிழர் வாழ்வு பிரதேசங்களுக்குள்ளும் எல்லைகளிலும் எம் கிராமங்களை ஊடறுத்தும் சிங்கள பெயர்களால் உருவாக்கப்பட்டிருப்பது எமக்கு வேதனையளிக்கின்றது.இது தொடர்பாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உரைகளில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அவை தொடர்பாக அலசி ஆராய்ந்து அகற்றி விடுங்கள். இதற்கு உங்கள் கட்சியும் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு வழங்கியதையும் நாம் அறிவோம்.

மேலும் நாம் முன்வைக்கும் இக் குற்றங்கள் காணமலாக்கப்பட்ட விடயத்தில் உங்கள் படையினர் மீது நம்பிக்கை இருந்தால் நாம் கூறும் சர்வதேச ஒருமுறைக்கு இடமளித்து உங்கள் நியாய தன்மையை சர்வதேசத்துக்கு தெளிவு படுத்துங்கள் அது யுத்தக் குற்றங்களில் இருந்து உங்கள் தூய்மைப்படுத்தும்.

இவை எல்லாவற்றிற்கும் முன் மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்.

அடுத்ததாக நாட்டின் பொருளாதாரத்துக்கு தம் இன்னுயிரை ஈந்து உழைத்து நாட்டின் வளர்ச்சியோடு சங்கமமாகியுள்ள மலையக மக்கள் இனமாக வாழ்வதையும் வளர்வதையும் திட்டமிட்ட பல்வேறு வகையில் தடுக்கப்படுவதாகவும் நாம் உணர்கின்றோம்.

இந்நிலையில் இம் மக்களின் பிரஜா உரிமை சம்பந்தமாக உங்கள் அமைப்பு எடுத்த ஆக்கபூர்வமான செயல்பட்டினை நினைவு கூர்ந்து நன்றி கூறுவதோடு; மலையக மக்களை இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனமாக அங்கீகரித்து அவர்களுக்கான காணி உரிமையினை முழுமையாக்கி, சுய பொருளாதரத்தில் வளரவும் அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவுமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கோருவதோடு அதற்கு தடையாக இருக்கும் இனவாத காரணிகளை அகற்றி தூய்மைப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.

புதிய இலங்கைக்கான மனநிலையில் மக்கள் உங்களை ஜனாதிபதியாக தெரிந்து இருக்கும் சூழ்நிலையில் நாடு இன்னுமொரு தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றது. இத்தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு உங்களோடு இருப்பதை நாம் எதிர்பார்க்கிறோம். இக்காலகட்டத்தில் நாம் விரும்பும் விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு எமது பார்வையில் சுத்தமாக்கப்பட வேண்டியவைகளை சுத்தமாக்குவதற்கான செயற்பாட்டு திட்டங்களை நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் நீங்கள் சார்ந்த அமைப்பு மற்றும் கட்சி முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி நாட்டை நேர்த்திசையில் கொண்டு செல்ல திடசங்க கூட்டம் கொள்ளுமாறு கேட்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்- அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை. மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவரால் இன்றையதினம்(25) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இலங்கையின் கடந்த கால அரசியல், பொருளாதார, அபிவிருத்தி, சமூக நல பொது சேவைகள் அது தொடர்பான கொள்கைகள், கட்டமைப்புகள் என்பவற்றோடு அரசியல் கலாச்சாரத்தையும் அரசியல் அரச இயந்திரத்தையும் "சுத்த கரண்ன ஓனே" (தூய்மைப்படுத்த வேண்டும்" எனும் மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுர குமார அவர்களின் குரலைக் கேட்டு பெருந்தொகையான வாக்குகளால் மக்கள் அவரை நாட்டில் தலைவராக்கி கௌரவப்படுத்தியுள்ளனர். நாட்டின் அனைத்து மக்களின் ஜனாதிபதியான அவரை வாழ்த்துவதோடு; கடந்த 75 வருட காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு பல இன கலவரங்களுக்கும், இன அழிப்பிற்கும், இனப்படுகொலைக்கும் உள்ளாகி தொடர்ந்தும் இன அழிப்பினை அனுபவித்துக் கொண்டிருக்கிற தமிழர்களாகிய நாங்களும் கூறுகின்றோம் "தூய்மைப்படுத்த வேண்டும்" அதனையும் செவிமடுத்தால் ஒரே நாட்டில் இரு தேச மக்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சிக்கண்டு ஒரே மக்கள் சக்தியாக எம்மை அடிமைப்படுத்த நினைக்கும் வல்லரசுகளுக்கும் இணைந்தே முகம் கொடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.வரலாற்றில் மக்கள் விடுதலை முன்னணி வடகிழக்கு தமிழர்களுக்கு எதிராகவும், மலையகத் தமிழர்களுக்கு எதிராகவும் மேற்கொண்ட அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்.யுத்த கொடூரத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் மட்டுமல்ல இன்று முழு நாடாக மக்கள் அனுபவிக்கும் பொருளாதார துன்பங்களுக்கும் உங்கள் அமைப்பும் காரணமாகும். அதனால் உங்கள் மீதுள்ள நம்பிக்கையீனத்திற்கும் காரணமானவைகளை தூய்மைப்படுத்தி எமது நம்பிக்கைக்கும் பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நாட்டில் தமிழர்களாகிய எம் மீது பெரும்பான்மை சமூகம் கொண்டிருக்கும் அரசியல் கலாச்சாரம் தொடர்ந்து தற்போதைய நிலையிலேயே இருக்குமானால் நாடு பிளவு படுவது மட்டுமல்ல தங்களுடைய காலத்திலும் அந்நிய சக்திகளின் ஆதிக்கம் அதிகரிப்பதோடு தங்களை பதவியில் அமர்த்தியவர்களே தங்களுக்கு எதிராக கிளர்ந்தெழலாம். இதனை சுத்தப்படுத்தி இனங்களின் அடையாளங்களை பாதுகாத்து முன்னோக்குமாறு வலியுறுத்துகின்றோம்.ஆதலால் எமது பார்வையில் இந்நாட்டில் நீண்ட கால வரலாற்றையும் கலாச்சார பாரம்பரியங்களை கொண்ட தமிழ் மக்களாகிய நாம் பொருளாதாரத்திற்கும், அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டுமானங்களுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பங்களித்துள்ள மக்களாக நாம் முன்வைக்கும் எமது அரசியல் அபிலாசைகளுக்கு அரசியல் தெளிவோடு, புரிதலோடு, நம்பிக்கையோடு, பயமின்றி செவிமடுத்து அதனை நடைமுறைபடுத்தி எம்மோடு இணைந்து பயணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.எனவே, நீங்கள் பிரித்த வடக்கையும் கிழக்கையும் மீள இணைத்து அதனை தமிழர் தாயகமாக ஏற்று அதன் அடிப்படையில் அரசியல் தீர்வுக்கு வழி வகுப்போம்.இதற்கு முன்னர் நாம் சிங்கள பௌத்த திணைக்களங்களாக அடையாளப்படுத்தும் தொல்லியல் திணைக்களம், வனவளங்கள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை என்பவற்றின் சிங்கள பௌத்த ஆதிக்க ஆக்கிரமிப்பு மற்றும் இன அழிப்பு செயற்பாடுகளை தடுத்து அவ் அரச கட்டமைப்புகளை தூய்மைப்படுத்தி எமது சமய, மொழி, கலை,கலாச்சார பாரம்பரியங்களை காக்குமாறும் எமது தாயக பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ வழி விடுமாறும் கேட்கின்றோம்.சிங்கள பௌத்த ஆதிக்க மனப்பான்மையோடு எமது விருப்பிற்கு நேர் மாறாகவும், பலவந்தமாகவும் அரசு காணிகளிலும், தனியார் காணிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பௌத்த சின்னங்களை எமது மண்ணிலிருந்து அகற்றி தூய்மை படுத்துங்கள்.அத்தோடு எமது இன பரம்பலையும் இருப்பையும் சிதைக்கவும், சிங்கள பௌத்த அரசியல் அதிகாரத்தை விரிவு படுத்தவுமென கடந்த 75 வருட காலமாக முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த குடியேற்றங்களை தடுத்து நிறுத்துமாறும் கூறுகின்றோம். அவ்வாறான குடியேற்றங்கள் தனி சிங்கள குடியேற்றங்கள் தமிழர் வாழ்வு பிரதேசங்களுக்குள்ளும் எல்லைகளிலும் எம் கிராமங்களை ஊடறுத்தும் சிங்கள பெயர்களால் உருவாக்கப்பட்டிருப்பது எமக்கு வேதனையளிக்கின்றது.இது தொடர்பாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உரைகளில் சுட்டிக் காட்டியுள்ளனர். அவை தொடர்பாக அலசி ஆராய்ந்து அகற்றி விடுங்கள். இதற்கு உங்கள் கட்சியும் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு வழங்கியதையும் நாம் அறிவோம்.மேலும் நாம் முன்வைக்கும் இக் குற்றங்கள் காணமலாக்கப்பட்ட விடயத்தில் உங்கள் படையினர் மீது நம்பிக்கை இருந்தால் நாம் கூறும் சர்வதேச ஒருமுறைக்கு இடமளித்து உங்கள் நியாய தன்மையை சர்வதேசத்துக்கு தெளிவு படுத்துங்கள் அது யுத்தக் குற்றங்களில் இருந்து உங்கள் தூய்மைப்படுத்தும்.இவை எல்லாவற்றிற்கும் முன் மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்.அடுத்ததாக நாட்டின் பொருளாதாரத்துக்கு தம் இன்னுயிரை ஈந்து உழைத்து நாட்டின் வளர்ச்சியோடு சங்கமமாகியுள்ள மலையக மக்கள் இனமாக வாழ்வதையும் வளர்வதையும் திட்டமிட்ட பல்வேறு வகையில் தடுக்கப்படுவதாகவும் நாம் உணர்கின்றோம்.இந்நிலையில் இம் மக்களின் பிரஜா உரிமை சம்பந்தமாக உங்கள் அமைப்பு எடுத்த ஆக்கபூர்வமான செயல்பட்டினை நினைவு கூர்ந்து நன்றி கூறுவதோடு; மலையக மக்களை இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனமாக அங்கீகரித்து அவர்களுக்கான காணி உரிமையினை முழுமையாக்கி, சுய பொருளாதரத்தில் வளரவும் அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவுமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கோருவதோடு அதற்கு தடையாக இருக்கும் இனவாத காரணிகளை அகற்றி தூய்மைப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.புதிய இலங்கைக்கான மனநிலையில் மக்கள் உங்களை ஜனாதிபதியாக தெரிந்து இருக்கும் சூழ்நிலையில் நாடு இன்னுமொரு தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றது. இத்தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு உங்களோடு இருப்பதை நாம் எதிர்பார்க்கிறோம். இக்காலகட்டத்தில் நாம் விரும்பும் விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு எமது பார்வையில் சுத்தமாக்கப்பட வேண்டியவைகளை சுத்தமாக்குவதற்கான செயற்பாட்டு திட்டங்களை நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் நீங்கள் சார்ந்த அமைப்பு மற்றும் கட்சி முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி நாட்டை நேர்த்திசையில் கொண்டு செல்ல திடசங்க கூட்டம் கொள்ளுமாறு கேட்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement