• Sep 21 2026

14 ஆண்டுகளாக நிரந்தர கட்டிடமின்றி இயங்கி வந்த புதுக்குடியிருப்பு தபாலகத்திற்கு விடிவு

Chithra / Sep 20th 2026, 5:01 pm
image


2012ஆம் ஆண்டு காணி ஒதுக்கப்பட்டும் 14 ஆண்டுகளாக நிரந்தர கட்டிடமின்றி இயங்கி வந்த புதுக்குடியிருப்பு தபாலகத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தெரிவித்துள்ளார்.


புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


புதுக்குடியிருப்பு தபாலகத்திற்கான காணி கடந்த 2012ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை நிரந்தர கட்டிடம் அமைக்கப்படாத நிலையில், தபாலகம் ஒன்பது வெவ்வேறு இடங்களில் மாறி மாறி சேவைகளை வழங்கி வந்துள்ளது.


இந்த நிலைமை தொடர்பில் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் 24ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன். 


அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்திருந்தேன். இந்தக் கோரிக்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட அமைச்சர், இவ்வருடம் தபாலகத்திற்கான புதிய கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.


மேலும், தபாலகத்திற்காக ஒதுக்கப்பட்ட காணி நீண்டகாலமாக பற்றைக்காடுகளாக காணப்பட்டமை தொடர்பிலும் ஊடகங்களின் ஊடாக வெளிக்கொண்டு வந்திருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய தபாலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. 


வருகின்ற வருடத்திற்குள் கட்டிட நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று, புதுக்குடியிருப்பு தபாலகத்தின் சேவைகள் புதிய கட்டிடத்தில் இடம்பெறவுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் மேலும் தெரிவித்துள்ளார்.

14 ஆண்டுகளாக நிரந்தர கட்டிடமின்றி இயங்கி வந்த புதுக்குடியிருப்பு தபாலகத்திற்கு விடிவு 2012ஆம் ஆண்டு காணி ஒதுக்கப்பட்டும் 14 ஆண்டுகளாக நிரந்தர கட்டிடமின்றி இயங்கி வந்த புதுக்குடியிருப்பு தபாலகத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தெரிவித்துள்ளார்.புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,புதுக்குடியிருப்பு தபாலகத்திற்கான காணி கடந்த 2012ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை நிரந்தர கட்டிடம் அமைக்கப்படாத நிலையில், தபாலகம் ஒன்பது வெவ்வேறு இடங்களில் மாறி மாறி சேவைகளை வழங்கி வந்துள்ளது.இந்த நிலைமை தொடர்பில் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் 24ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன். அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்திருந்தேன். இந்தக் கோரிக்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட அமைச்சர், இவ்வருடம் தபாலகத்திற்கான புதிய கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.மேலும், தபாலகத்திற்காக ஒதுக்கப்பட்ட காணி நீண்டகாலமாக பற்றைக்காடுகளாக காணப்பட்டமை தொடர்பிலும் ஊடகங்களின் ஊடாக வெளிக்கொண்டு வந்திருந்தேன்.அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய தபாலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. வருகின்ற வருடத்திற்குள் கட்டிட நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று, புதுக்குடியிருப்பு தபாலகத்தின் சேவைகள் புதிய கட்டிடத்தில் இடம்பெறவுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement