• Jan 15 2025

பேருந்து அலங்காரங்களை அகற்றுவது கிளீன் சிறிலங்கா திட்டம் அல்ல! அநுர அதரப்பு விளக்கம்

Chithra / Jan 10th 2025, 9:13 am
image

 

பேருந்துகளில் தேவையற்ற அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கையானது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் பொலிஸார், பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள சட்டவிரோத அலங்காரங்களை அகற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கை தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக அவற்றை அகற்றுவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பொலிஸார் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கை போன்றதொரு தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர்  குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து அலங்காரங்களை அகற்றுவது கிளீன் சிறிலங்கா திட்டம் அல்ல அநுர அதரப்பு விளக்கம்  பேருந்துகளில் தேவையற்ற அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கையானது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் பொலிஸார், பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள சட்டவிரோத அலங்காரங்களை அகற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.தேவையற்ற அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கை தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக அவற்றை அகற்றுவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.எனினும் பொலிஸார் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கை போன்றதொரு தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளார்.எனவே இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement