கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 5.45 மணியளவில் யாழ்.பருத்தித்துறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய யோகலிங்கம் குமரேஸ்வரன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 59 வயதான சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
விபத்திற்கு காரணமான சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கில் இடம்பெற்ற கோர விபத்துக்கள் - இருவர் பரிதாபமாக உயிரிழப்பு கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இன்று காலை 5.45 மணியளவில் யாழ்.பருத்தித்துறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய யோகலிங்கம் குமரேஸ்வரன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இறந்தவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 59 வயதான சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.விபத்திற்கு காரணமான சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.