• Oct 18 2024

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் எவரது தொழிலுரிமைக்கும் பாதிப்பு ஏற்படாது - இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 6:48 pm
image

Advertisement

இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது வெறும் அரசியல் பிரச்சாரமென மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த விசனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான நிபுணர் குழு அறிக்கை எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஒக்டோபர் மாதத்துக்குள் மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பட்டியலில் மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் எவரது தொழிலுரிமைக்கும் பாதிப்பு ஏற்படாது. 

அரசாங்கத்துக்கு சுமையாக உள்ள நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்காவிட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது வெறும் அரசியல் பிரச்சாரமாகும்.

ஒரு சில அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தியுள்ளதால் பொது மக்களுக்கான சேவைகள் வினைத்திறனாக கிடைக்கப் பெறுகிறது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் எவரது தொழிலுரிமைக்கும் பாதிப்பு ஏற்படாது - இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு samugammedia இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது வெறும் அரசியல் பிரச்சாரமென மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த விசனம் வெளியிட்டுள்ளார்.இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான நிபுணர் குழு அறிக்கை எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் ஒக்டோபர் மாதத்துக்குள் மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பட்டியலில் மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் எவரது தொழிலுரிமைக்கும் பாதிப்பு ஏற்படாது. அரசாங்கத்துக்கு சுமையாக உள்ள நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்காவிட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது வெறும் அரசியல் பிரச்சாரமாகும்.ஒரு சில அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தியுள்ளதால் பொது மக்களுக்கான சேவைகள் வினைத்திறனாக கிடைக்கப் பெறுகிறது.

Advertisement

Advertisement

Advertisement