• Oct 18 2024

கோட்டா கோ கோம் என எழுப்பிய குரல்கள் இன்று நாடு குறித்து சிந்திக்கின்றனர் - மகிழ்ச்சி வெளியிட்ட அமைச்சர்.! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 6:15 pm
image

Advertisement

காலி முகத்திடலில் அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் இன்று நாடு குறித்து சிந்தித்து செயற்படுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கோட்டா கோ கோம் ' என்று குரல் எழுப்பி போராடியவர்கள் பலர் இன்று நாடு குறித்து சிந்திக்கின்றனர். 

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கடந்த காலத்தில் உரப்பிரச்சினையினால் சீரழிந்த விவசாயத்துறை இன்று அபிவிருத்தி கண்டுவருகிறது. 

இம்முறை உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக அரிசி மேலதிமாக பெற்றப்பட்டுள்ளது.

கட்சிவேறுபாடு இன்றி நாடு குறித்து செயல்படும் ஜனாதிபதி செயல்படுகின்றர். 

இதனால் சில உறுப்பினர் தமது அரசியல் எதிர்காலம் குறித்து கலக்கிப்போயுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டு மக்கள்,தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை இம்முறை  மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். 

புத்தாண்டுக்காக மக்கள் வங்கியின் பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் 45 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை பெற்றுள்ளனர்.

இன்று எரிபொருட்களின் விலைகள் படிப்படியாக குறைய ஆரபித்துள்ளன. இதேபோன்று பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுவருகின்றன.

 உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கும் நாட்டின் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது

கோட்டா கோ கோம் என எழுப்பிய குரல்கள் இன்று நாடு குறித்து சிந்திக்கின்றனர் - மகிழ்ச்சி வெளியிட்ட அமைச்சர். samugammedia காலி முகத்திடலில் அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் இன்று நாடு குறித்து சிந்தித்து செயற்படுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.கோட்டா கோ கோம் ' என்று குரல் எழுப்பி போராடியவர்கள் பலர் இன்று நாடு குறித்து சிந்திக்கின்றனர். அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.கடந்த காலத்தில் உரப்பிரச்சினையினால் சீரழிந்த விவசாயத்துறை இன்று அபிவிருத்தி கண்டுவருகிறது. இம்முறை உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக அரிசி மேலதிமாக பெற்றப்பட்டுள்ளது.கட்சிவேறுபாடு இன்றி நாடு குறித்து செயல்படும் ஜனாதிபதி செயல்படுகின்றர். இதனால் சில உறுப்பினர் தமது அரசியல் எதிர்காலம் குறித்து கலக்கிப்போயுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.நாட்டு மக்கள்,தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை இம்முறை  மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். புத்தாண்டுக்காக மக்கள் வங்கியின் பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் 45 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை பெற்றுள்ளனர்.இன்று எரிபொருட்களின் விலைகள் படிப்படியாக குறைய ஆரபித்துள்ளன. இதேபோன்று பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுவருகின்றன. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கும் நாட்டின் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement