• Nov 23 2024

காலஞ்சென்ற இலியாஸுக்கு பதிலாக வேறொரு வேட்பாளர் - தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய சந்தர்ப்பம்

Chithra / Aug 25th 2024, 8:14 am
image


ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த நிலையில் மரணித்த வைத்தியர் ஹைதுருஸ் மொஹம்மட் இலியாஸுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம் உள்ளது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஹைதுருஸ் மொஹம்மட் இலியாஸின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் இலியாஸ் சார்பில் வேட்புமனுவில் கையொப்பமிட்டவருக்கு வேறொரு வேட்பாளரை பரிந்துரைக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு 3 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் வாக்குச்சீட்டில் மொஹம்மட் இலியாஸின் வாக்காளர் சின்னமும் பெயரும் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றில் மாற்றங்கள் ஏதும் இடம்பெறமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை சுயாதீன வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த புத்தளத்தைச் சேர்ந்த வைத்தியர் ஹைதுருஸ் மொஹம்மட் இலியாஸ் கடந்த வியாழக்கிழமை காலமானார்.

மாரடைப்பால் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தனது 79 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

காலஞ்சென்ற இலியாஸுக்கு பதிலாக வேறொரு வேட்பாளர் - தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய சந்தர்ப்பம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த நிலையில் மரணித்த வைத்தியர் ஹைதுருஸ் மொஹம்மட் இலியாஸுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம் உள்ளது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஹைதுருஸ் மொஹம்மட் இலியாஸின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் இலியாஸ் சார்பில் வேட்புமனுவில் கையொப்பமிட்டவருக்கு வேறொரு வேட்பாளரை பரிந்துரைக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதற்கு 3 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் வாக்குச்சீட்டில் மொஹம்மட் இலியாஸின் வாக்காளர் சின்னமும் பெயரும் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றில் மாற்றங்கள் ஏதும் இடம்பெறமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை சுயாதீன வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த புத்தளத்தைச் சேர்ந்த வைத்தியர் ஹைதுருஸ் மொஹம்மட் இலியாஸ் கடந்த வியாழக்கிழமை காலமானார்.மாரடைப்பால் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தனது 79 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

Advertisement

Advertisement

Advertisement