• Nov 17 2024

பழனி திகாம்பரத்தால் கைவிடப்பட்ட குடியிருப்பு வேலைத்திட்டத்தை அமைத்து தருமாறு ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கை..!samugammedia

Tharun / Feb 24th 2024, 8:20 pm
image

2017 ம் ஆண்டில் கைவிடப்பட்டுள்ள குடியிருப்புக்கான வேலை திட்டத்தினை மீளவும் ஆரம்பித்து தருமாறு  புரவுன்ஷீக் தோட்டராணி பிரிவுமக்கள் அமைச்சர் ஜீவன் தொண்டைமானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் 

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2017 ம் ஆண்டில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் 40 தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வரும் அத் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் அமைக்க அப்போதைய புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புரை க்கு அமைய இந்த குடியிருப்புக்கான வேலை திட்டம் அரம்பிக்கப்பட்ட போதும் குறித்த திட்டம் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.

இதனால் பல கோடி ரூபாய் வீணடிக்க பட்டதுடன் 40 குடும்பங்களைச் சார்ந்த ராணி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வருகிறார்கள்.

இந்த தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வரும் தொழிலாளர்களின் பிள்ளைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் சொல்லொனா  துயர் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு தற்போதைய அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன் வந்து இந்த வீடமைப்பு திட்டத்தை திட்ட மிட்ட படி நிரைவு செய்து தருமாறு அத் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பழனி திகாம்பரத்தால் கைவிடப்பட்ட குடியிருப்பு வேலைத்திட்டத்தை அமைத்து தருமாறு ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கை.samugammedia 2017 ம் ஆண்டில் கைவிடப்பட்டுள்ள குடியிருப்புக்கான வேலை திட்டத்தினை மீளவும் ஆரம்பித்து தருமாறு  புரவுன்ஷீக் தோட்டராணி பிரிவுமக்கள் அமைச்சர் ஜீவன் தொண்டைமானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2017 ம் ஆண்டில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் 40 தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வரும் அத் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் அமைக்க அப்போதைய புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புரை க்கு அமைய இந்த குடியிருப்புக்கான வேலை திட்டம் அரம்பிக்கப்பட்ட போதும் குறித்த திட்டம் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.இதனால் பல கோடி ரூபாய் வீணடிக்க பட்டதுடன் 40 குடும்பங்களைச் சார்ந்த ராணி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வருகிறார்கள்.இந்த தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வரும் தொழிலாளர்களின் பிள்ளைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் சொல்லொனா  துயர் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு தற்போதைய அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன் வந்து இந்த வீடமைப்பு திட்டத்தை திட்ட மிட்ட படி நிரைவு செய்து தருமாறு அத் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement