• Dec 27 2024

திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கு : இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

Tharmini / Dec 24th 2024, 9:34 am
image

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு, முன்னர் வழங்கப்பட்டதை போன்று, புதிய ஆண்டிலும் (2025), இலவச 

போக்குவரத்து வசதியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை, திருகோணமலை மாவட்ட கங்கத்தலாக ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தால் விடுக்கப்பட்டுள்ளது. 

இவற்றோடு, இன்னும் சில கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை, ஊடகவியலாளர் ஒன்றியம் கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் 

தலைவர் பீ.ஆர்.பி.கித்சிறி நவரத்னயிடம், நேற்று (22) கையளித்தது.

 அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது, மாவட்டத்திற்குள் பயணிப்பதற்காக வழங்கப்பட்ட இலவச அனுமதிப் பத்திரத்தை மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து செய்யும் வகையில் ஒழுங்குபடுத்தித் தருவதற்கு ஆவன செய்ய வேண்டும். 

அரச ஊழியர்களாக இல்லாத ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் இலவச அனுமதிச்சீட்டை ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

சில பேருந்து நடத்துனர்கள், இலவச போக்குவரத்து அனுமதி அட்டையை ஏற்க மறுப்பதனால், பேருந்துகளில் வைத்து ஊடகவியலாளர்கள் பல்வேறு அசௌரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. 

இதனால், இலவச பாஸ் தொடர்பாக நடத்துநர்களுக்கு போதியளவு தெளிவூட்டப்பட வேண்டும்.

இலவச பயண அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்படும் கடிதங்களில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை இல்லாத ஊடகவியலாளர்கள், தாங்கள் பணிபுரியும் ஊடக நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவை கடிதத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த மகஜர் கையளிக்கும் நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் தலைவருடன், முகாமையாளர் எம்.எம்.எச்.உதயகுமாரவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கு : இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு, முன்னர் வழங்கப்பட்டதை போன்று, புதிய ஆண்டிலும் (2025), இலவச போக்குவரத்து வசதியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்தக் கோரிக்கை, திருகோணமலை மாவட்ட கங்கத்தலாக ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தால் விடுக்கப்பட்டுள்ளது. இவற்றோடு, இன்னும் சில கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை, ஊடகவியலாளர் ஒன்றியம் கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் பீ.ஆர்.பி.கித்சிறி நவரத்னயிடம், நேற்று (22) கையளித்தது. அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது, மாவட்டத்திற்குள் பயணிப்பதற்காக வழங்கப்பட்ட இலவச அனுமதிப் பத்திரத்தை மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து செய்யும் வகையில் ஒழுங்குபடுத்தித் தருவதற்கு ஆவன செய்ய வேண்டும். அரச ஊழியர்களாக இல்லாத ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் இலவச அனுமதிச்சீட்டை ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும்.சில பேருந்து நடத்துனர்கள், இலவச போக்குவரத்து அனுமதி அட்டையை ஏற்க மறுப்பதனால், பேருந்துகளில் வைத்து ஊடகவியலாளர்கள் பல்வேறு அசௌரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதனால், இலவச பாஸ் தொடர்பாக நடத்துநர்களுக்கு போதியளவு தெளிவூட்டப்பட வேண்டும்.இலவச பயண அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்படும் கடிதங்களில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை இல்லாத ஊடகவியலாளர்கள், தாங்கள் பணிபுரியும் ஊடக நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவை கடிதத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மகஜர் கையளிக்கும் நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் தலைவருடன், முகாமையாளர் எம்.எம்.எச்.உதயகுமாரவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement