• Jun 27 2026

சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை நிறுத்தி வைக்க கோரிக்கை

Chithra / Jun 26th 2026, 2:07 pm
image


மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, நாளை (27) முதல் 29-ஆம் திகதி வரை, கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார். 


இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், 


இவ்வாறு அமைப்புகளை நிறுத்தி வைப்பதன் மூலம் கடந்த வெசாக் தினத்தில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.


இந்த நடவடிக்கை மின்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை நிறுத்தி வைக்க கோரிக்கை மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, நாளை (27) முதல் 29-ஆம் திகதி வரை, கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், இவ்வாறு அமைப்புகளை நிறுத்தி வைப்பதன் மூலம் கடந்த வெசாக் தினத்தில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை மின்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement