• Oct 15 2026

மழையால் நிரம்பும் நீர்த்தேக்கம்; – தாழ்நில மக்களுக்கு அவசர எச்சரிக்கை! 171 கடற்படை குழுக்கள் தயார் நிலையில்!

Chithra / Oct 15th 2026, 11:07 am
image


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் தற்போது தலா ஒரு அடி உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 1,400 கன அடி நீர் தெதுரு ஓயா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தெதுரு ஓயா ஆற்றுப் படுகைப் பகுதிகளில் ஏற்கனவே மழை பெய்து வருவதால், ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடிய நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், தெதுரு ஓயா ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசனப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.


குறிப்பாக, ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர்மட்ட மாற்றங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை கடற்படையின் 171 அனர்த்த நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நேற்று (14) புதன்கிழமை காலை நிலவரப்படி, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஐந்து அனர்த்த நிவாரணக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் நாவலப்பிட்டி பகுதியில் ஒரு குழுவும், கம்பளை பகுதியில் ஒரு குழுவும், இரத்தினபுரி பகுதியில் மூன்று குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


குறித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், இந்தக் குழுக்கள் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.


மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், தேவைக்கேற்ப அனர்த்த நிவாரணக் குழுக்களை விரைவாகப் பணியில் ஈடுபடுத்துவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மழையால் நிரம்பும் நீர்த்தேக்கம்; – தாழ்நில மக்களுக்கு அவசர எச்சரிக்கை 171 கடற்படை குழுக்கள் தயார் நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் தற்போது தலா ஒரு அடி உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 1,400 கன அடி நீர் தெதுரு ஓயா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தெதுரு ஓயா ஆற்றுப் படுகைப் பகுதிகளில் ஏற்கனவே மழை பெய்து வருவதால், ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடிய நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், தெதுரு ஓயா ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசனப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.குறிப்பாக, ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர்மட்ட மாற்றங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை கடற்படையின் 171 அனர்த்த நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று (14) புதன்கிழமை காலை நிலவரப்படி, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஐந்து அனர்த்த நிவாரணக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் நாவலப்பிட்டி பகுதியில் ஒரு குழுவும், கம்பளை பகுதியில் ஒரு குழுவும், இரத்தினபுரி பகுதியில் மூன்று குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.குறித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், இந்தக் குழுக்கள் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், தேவைக்கேற்ப அனர்த்த நிவாரணக் குழுக்களை விரைவாகப் பணியில் ஈடுபடுத்துவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement