• Apr 17 2026

மஸ்கெலியாவில் குரங்குகள் தொல்லையால் பீதியடைந்துள்ள குடியிருப்பாளர்கள்!

Ziya / Feb 25th 2026, 3:30 pm
image

நல்லதண்ணி வன ஜீவராசிகள் பிரிவிற்கு உட்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா நகர்,  மொக்கா தோட்டம் ,எடம்ஸ்பீக் தோட்டம், நல்லதண்ணி நகர், லக்சபான தோட்டம்,ரக்காடு கிராம பகுதி, மறே தோட்ட பகுதியில் அதிக அளவில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லஅதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 


சுமார் ஆயிர கணக்கான  குரங்குகள்  கூட்டம் கூட்டமாக  மக்கள் குடியிருப்புகளுக்குல் புகுந்து   சமைத்த உணவுகள் மற்றும் வீட்டில்  உள்ள   உலர் உணவுப் பொருட்கள் போன்றவற்றை தூக்கி செல்வதாகவும் மேலும்  உடைகள் பாடசாலை பிள்ளைகளின் சப்பாத்துக்கள் போன்றவற்றையும்  தூக்கி சென்று விடுவதாகவும்  அந்த அந்த பகுதியில் உள்ள மக்கள்  தெரிவித்துள்ளனர் .


குறித்த குரங்குகள் அங்குள்ள விவசாய நிலங்களில்  உள்ள பயிர்களை நாசம் செய்கின்றபடியால்  இங்குள்ள மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் .  


இந்த குரங்குகள்  இரவு பகலாக குறித்த குடியிருப்பாளர் பகுதியில் வாழ்விடமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் குறித்த குரங்குகள்  மக்கள் வீடுகளுக்கு மேல் உள்ள கூரைகளை உடைத்து கொண்டு  வீட்டுக்கு உள்ளே புகுந்த செல்வதால் கூரைகள் சேதமடைவதாகவும்    இதனை விரட்ட  முயற்சி செய்யும் போது  குரங்குகள் கடிக்க  பாய்வதாகவும்  குறித்த குரங்குகள் இங்குள்ள வளர்ப்பு நாய்களையும்   தீண்டி விட்டு செல்வதாகவும் இதன் காரணமாக தினமும் பீதியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர் .


குழந்தைகள் மற்றும் நோயாளர்கள் வீட்டில் தனியாக விட்டு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது குறித்த விடயம் சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .


அத்துடன் மாத்தளை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வானர சரணாலயத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து குரங்குகளையும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .

மஸ்கெலியாவில் குரங்குகள் தொல்லையால் பீதியடைந்துள்ள குடியிருப்பாளர்கள் நல்லதண்ணி வன ஜீவராசிகள் பிரிவிற்கு உட்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா நகர்,  மொக்கா தோட்டம் ,எடம்ஸ்பீக் தோட்டம், நல்லதண்ணி நகர், லக்சபான தோட்டம்,ரக்காடு கிராம பகுதி, மறே தோட்ட பகுதியில் அதிக அளவில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லஅதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் ஆயிர கணக்கான  குரங்குகள்  கூட்டம் கூட்டமாக  மக்கள் குடியிருப்புகளுக்குல் புகுந்து   சமைத்த உணவுகள் மற்றும் வீட்டில்  உள்ள   உலர் உணவுப் பொருட்கள் போன்றவற்றை தூக்கி செல்வதாகவும் மேலும்  உடைகள் பாடசாலை பிள்ளைகளின் சப்பாத்துக்கள் போன்றவற்றையும்  தூக்கி சென்று விடுவதாகவும்  அந்த அந்த பகுதியில் உள்ள மக்கள்  தெரிவித்துள்ளனர் .குறித்த குரங்குகள் அங்குள்ள விவசாய நிலங்களில்  உள்ள பயிர்களை நாசம் செய்கின்றபடியால்  இங்குள்ள மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் .  இந்த குரங்குகள்  இரவு பகலாக குறித்த குடியிருப்பாளர் பகுதியில் வாழ்விடமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் குறித்த குரங்குகள்  மக்கள் வீடுகளுக்கு மேல் உள்ள கூரைகளை உடைத்து கொண்டு  வீட்டுக்கு உள்ளே புகுந்த செல்வதால் கூரைகள் சேதமடைவதாகவும்    இதனை விரட்ட  முயற்சி செய்யும் போது  குரங்குகள் கடிக்க  பாய்வதாகவும்  குறித்த குரங்குகள் இங்குள்ள வளர்ப்பு நாய்களையும்   தீண்டி விட்டு செல்வதாகவும் இதன் காரணமாக தினமும் பீதியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர் .குழந்தைகள் மற்றும் நோயாளர்கள் வீட்டில் தனியாக விட்டு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது குறித்த விடயம் சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .அத்துடன் மாத்தளை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வானர சரணாலயத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து குரங்குகளையும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .

Advertisement

Advertisement

Advertisement