• Nov 25 2024

போதகர் ஜெரோமின் வருகைக்கு கடும் எதிர்ப்பு - கிளர்ந்தெழுந்த நாவலப்பிட்டி மக்கள்

Chithra / Nov 6th 2024, 9:32 am
image


போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாவலப்பிட்டி மீப்பிட்டிய பிரதேசத்திற்கு சென்றதையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வௌிப்படுத்தியதன் காரணமாக இவ்வாறானதொரு நிலைமை நேற்று ஏற்பட்டுள்ளது.

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான புனர்வாழ்வு நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் இடமொன்றுக்கு, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வருகையைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

புனர்வாழ்வு நிலையத்துக்கு பதிலாக போதகர் ஜெரோம், ஒரு மத தலத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே கிராம மக்கள், ஜெரோமின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

பின்னர், கிராம மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, பௌத்த மத நிந்தனை என்ற குற்றச்சாட்டின் பேரில்  போதகர் ஜெரோம் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

போதகர் ஜெரோமின் வருகைக்கு கடும் எதிர்ப்பு - கிளர்ந்தெழுந்த நாவலப்பிட்டி மக்கள் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாவலப்பிட்டி மீப்பிட்டிய பிரதேசத்திற்கு சென்றதையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வௌிப்படுத்தியதன் காரணமாக இவ்வாறானதொரு நிலைமை நேற்று ஏற்பட்டுள்ளது.மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான புனர்வாழ்வு நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் இடமொன்றுக்கு, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வருகையைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.புனர்வாழ்வு நிலையத்துக்கு பதிலாக போதகர் ஜெரோம், ஒரு மத தலத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே கிராம மக்கள், ஜெரோமின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர்.இதனையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர், கிராம மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.முன்னதாக, பௌத்த மத நிந்தனை என்ற குற்றச்சாட்டின் பேரில்  போதகர் ஜெரோம் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement