• Jul 10 2025

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டம் குறித்து விசேட கலந்துரையாடல்

Chithra / Jul 10th 2025, 10:42 am
image


மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

நாட்டில் தொழிற்துறை மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட களுத்துறை நகரத்தை பரந்த அபிவிருத்திக்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு  நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவாக செயற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு அனைத்துத் தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது.

சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டதன் பின்னர், பிரதான நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் மற்றும் வினைத்திறன் மிக்கதாக்குவது குறித்தும், அதன் மூலம் களுத்துறை நகரில் தற்போது இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 


களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டம் குறித்து விசேட கலந்துரையாடல் மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.நாட்டில் தொழிற்துறை மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட களுத்துறை நகரத்தை பரந்த அபிவிருத்திக்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு  நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவாக செயற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு அனைத்துத் தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது.சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டதன் பின்னர், பிரதான நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் மற்றும் வினைத்திறன் மிக்கதாக்குவது குறித்தும், அதன் மூலம் களுத்துறை நகரில் தற்போது இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement