• Jan 19 2025

உணவகம் இடிந்து விழுந்து - 6 பாடசாலை மாணவர்களுக்கு காயம்

Tharmini / Jan 18th 2025, 4:29 pm
image

கினிகத்தேன நகரில் உள்ள உணவகம் இடிந்து விழுந்ததில் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (18) காலை கினிகத்ஹேன நகருக்கு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள இந்த மாணவர்கள் உணவு அருந்துவதற்காக சிற்றுண்டிச்சாலைக்கு சென்றுள்ளனர்.

அங்கு மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் தங்கியிருந்த அடித்தளத்தின் தளம் உடைந்து சுமார் 15 அடி சாய்வாக கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த உணவகம் பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகம் இடிந்து விழுந்து - 6 பாடசாலை மாணவர்களுக்கு காயம் கினிகத்தேன நகரில் உள்ள உணவகம் இடிந்து விழுந்ததில் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று (18) காலை கினிகத்ஹேன நகருக்கு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள இந்த மாணவர்கள் உணவு அருந்துவதற்காக சிற்றுண்டிச்சாலைக்கு சென்றுள்ளனர்.அங்கு மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் தங்கியிருந்த அடித்தளத்தின் தளம் உடைந்து சுமார் 15 அடி சாய்வாக கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.குறித்த உணவகம் பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement