• May 11 2024

வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் - எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்! samugammedia

Chithra / Jun 14th 2023, 11:17 am
image

Advertisement

சில மூலதன பரிவர்த்தனைகள் மற்றும் மொபைல் பரிமாற்றங்கள் தொடர்பான வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2020 முதல், மூலதனப் பரிவர்த்தனைகள் மற்றும் மொபைல் பரிமாற்றங்கள் தொடர்பான வெளிப்புறப் பணப்பரிமாற்றங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான கடைசி உத்தரவை 2022 டிசம்பர் 22 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் எண் சட்டத்தின் கீழ் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் வெளியிடப்பட்டது.

இந்த உத்தரவு ஜூன் 30ஆம் திகதியுடன் காலாவதியாகிறது.

இதன்படி, பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர், இந்த உத்தரவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் - எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் samugammedia சில மூலதன பரிவர்த்தனைகள் மற்றும் மொபைல் பரிமாற்றங்கள் தொடர்பான வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 2020 முதல், மூலதனப் பரிவர்த்தனைகள் மற்றும் மொபைல் பரிமாற்றங்கள் தொடர்பான வெளிப்புறப் பணப்பரிமாற்றங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.இது தொடர்பான கடைசி உத்தரவை 2022 டிசம்பர் 22 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் எண் சட்டத்தின் கீழ் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் வெளியிடப்பட்டது.இந்த உத்தரவு ஜூன் 30ஆம் திகதியுடன் காலாவதியாகிறது.இதன்படி, பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர், இந்த உத்தரவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement