• May 17 2024

சமையல் எரிவாயு விலையில் திருத்தம்? - லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Dec 2nd 2023, 3:05 pm
image

Advertisement

 

லாஃப்ஸ் நிறுவனமும் தமது சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டது என அறிவித்துள்ளது.

தற்போது, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 3,985 ரூபாவுக்கும் ஐந்து கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 1,595 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில், தொடர்ந்தும் அதே விலையில் தமது எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்வதற்கு லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இம்மாதம் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இம்மாதம் எரிவாயு விலை அதிகரிக்கப்படவில்லை 

எனவும் அவர் மேலும் கூறினார்.

சர்வதேச விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் தற்போதைய நாணய மாற்று வீதத்தை கருத்திற் கொண்டு எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 3,565 ரூபாவுக்கும், 

5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 1,431 ரூபாவுக்கும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 668 ரூபாவுக்கும்  எவ்வித மாற்றமுமின்றி விறபனை செய்யப்படும்.


சமையல் எரிவாயு விலையில் திருத்தம் - லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு samugammedia  லாஃப்ஸ் நிறுவனமும் தமது சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டது என அறிவித்துள்ளது.தற்போது, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 3,985 ரூபாவுக்கும் ஐந்து கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 1,595 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்தநிலையில், தொடர்ந்தும் அதே விலையில் தமது எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்வதற்கு லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.முன்னதாக, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இம்மாதம் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இம்மாதம் எரிவாயு விலை அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.சர்வதேச விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் தற்போதைய நாணய மாற்று வீதத்தை கருத்திற் கொண்டு எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 3,565 ரூபாவுக்கும், 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 1,431 ரூபாவுக்கும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 668 ரூபாவுக்கும்  எவ்வித மாற்றமுமின்றி விறபனை செய்யப்படும்.

Advertisement

Advertisement

Advertisement