குருணாகல் - வெல்லவ பகுதியில் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து தகவல் வழங்குவோருக்கு ஒரு மில்லியன் ரூபாவினை வெகுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமாயின் 071-8591244 அல்லது 071-8591882 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.
சந்தேக நபர்கள் குறித்து தகவல் வழங்கினால் ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம் பொலிஸார் அறிவிப்பு குருணாகல் - வெல்லவ பகுதியில் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து தகவல் வழங்குவோருக்கு ஒரு மில்லியன் ரூபாவினை வெகுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமாயின் 071-8591244 அல்லது 071-8591882 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.