• Jan 23 2025

அரசின் திட்டத்திற்கு இணங்காவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படும் – எச்சரித்த ஜனாதிபதி

Chithra / Jan 22nd 2025, 11:53 am
image


அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒனடறழல் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய நெல் ஆலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாவிட்டால், நெல் ஆலையில் உள்ள தமது கடைக்கு அரிசி கொண்டு செல்லும் வரை இராணுவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

அரிசி தேசிய சொத்து, அரசாங்கம் இதுவரை எந்தவிதமான நியாயமற்ற விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஆலை உரிமையாளர் எவரேனும் இணங்காவிட்டால், ஆலையை இராணுவத்தினர் கையகப்படுத்தி அரிசி உற்பத்தி செய்து சந்தைக்கு விடப்படும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட ஒரு சதம் அதிகமாக அரிசி விற்பனை செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசின் திட்டத்திற்கு இணங்காவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படும் – எச்சரித்த ஜனாதிபதி அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒனடறழல் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பாரிய நெல் ஆலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாவிட்டால், நெல் ஆலையில் உள்ள தமது கடைக்கு அரிசி கொண்டு செல்லும் வரை இராணுவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.அரிசி தேசிய சொத்து, அரசாங்கம் இதுவரை எந்தவிதமான நியாயமற்ற விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.ஆலை உரிமையாளர் எவரேனும் இணங்காவிட்டால், ஆலையை இராணுவத்தினர் கையகப்படுத்தி அரிசி உற்பத்தி செய்து சந்தைக்கு விடப்படும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட ஒரு சதம் அதிகமாக அரிசி விற்பனை செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement