• Oct 30 2024

பரீட்சை மண்டபத்தில் மாணவர்களிடையே வெடித்த கலவரம்! ஒருவர் காயம் - பெண் கைது..!

Chithra / May 15th 2024, 10:15 am
image

Advertisement

 

அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள முன்னணி தமிழ் பாடசாலையொன்றின் பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றுள்ளது.

இந்த வருட க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்காக அனுராதபுரம் நகரில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அதே பாடசாலையில் பரீட்சை மண்டபம் வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கம்பிரிகஸ்வெவ பிரதேச பாடசாலையொன்றின் மாணவர்களும் அங்கு பரீட்சை எழுத வந்துள்ளனர்.

ஆரம்பம் முதல் இருதரப்புக்கும் இடையில் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த திங்கட்கிழமை காலை மாணவர்கள் இருதரப்பாக மோதிக்கொண்டுள்ளனர்.

இதன்போது பரீட்சை மண்டபத்திற்குள் அத்துமீறிய மாணவன் ஒருவரின் தாயார் ஏனைய மாணவர்களை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.

இதன் காரணமாக ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ​பரீட்சை முடிவுற்ற பின்னர் கம்பிரிகஸ்வெவ பிரதேச மாணவர்களை பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகளில் ஏற்றி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரீட்சை மண்டபத்தில் மாணவர்களிடையே வெடித்த கலவரம் ஒருவர் காயம் - பெண் கைது.  அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள முன்னணி தமிழ் பாடசாலையொன்றின் பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றுள்ளது.இந்த வருட க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்காக அனுராதபுரம் நகரில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அதே பாடசாலையில் பரீட்சை மண்டபம் வழங்கப்பட்டுள்ளது.இதேநேரம் கம்பிரிகஸ்வெவ பிரதேச பாடசாலையொன்றின் மாணவர்களும் அங்கு பரீட்சை எழுத வந்துள்ளனர்.ஆரம்பம் முதல் இருதரப்புக்கும் இடையில் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த திங்கட்கிழமை காலை மாணவர்கள் இருதரப்பாக மோதிக்கொண்டுள்ளனர்.இதன்போது பரீட்சை மண்டபத்திற்குள் அத்துமீறிய மாணவன் ஒருவரின் தாயார் ஏனைய மாணவர்களை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.இதன் காரணமாக ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், ​பரீட்சை முடிவுற்ற பின்னர் கம்பிரிகஸ்வெவ பிரதேச மாணவர்களை பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகளில் ஏற்றி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement