அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவா? என்கின்ற சர்ச்சை எழுந்துள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார கூட்ட மேடையை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்றையதினம்(31) பார்வையிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வவுனியாவிற்கு நாளைய தினம்(01) வருகை தரும் ஜனாதிபதி வேட்பாளரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வவுனியா வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.
அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த ஏற்பாடுகள் இடம்பெறும் இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவற்றை பார்வையிட்டிருந்ததுடன், அங்கு நின்ற சிலருடன் உரையாடியும் இருந்தார்.
ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு என அறிவித்த நிலையில், குறித்த இடத்திற்கு சென்று ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டமை அவரது ஆதரவு யாருக்கு என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவா வெடித்தது சர்ச்சை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவா என்கின்ற சர்ச்சை எழுந்துள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார கூட்ட மேடையை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்றையதினம்(31) பார்வையிட்டுள்ளார். இதன் காரணமாகவே குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.வவுனியாவிற்கு நாளைய தினம்(01) வருகை தரும் ஜனாதிபதி வேட்பாளரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வவுனியா வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த ஏற்பாடுகள் இடம்பெறும் இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவற்றை பார்வையிட்டிருந்ததுடன், அங்கு நின்ற சிலருடன் உரையாடியும் இருந்தார்.ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு என அறிவித்த நிலையில், குறித்த இடத்திற்கு சென்று ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டமை அவரது ஆதரவு யாருக்கு என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.