நிலவும் மழையுடனான காலநிலை மாற்றங்களால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டினர்.
இதன் ஒரு பகுதியாக, நோய்த்தொற்று அபாயம் காணப்படும் நபர்களுக்கு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
கந்தளாய் பேராறு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதாரத் துறையினர் நேற்று திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) டாக்டர் நசீர் அகமட் வழிகாட்டலின் கீழ், பொது சுகாதார பரிசோதகர் (PHI) அருள் மோகன் தலைமையிலான குழுவினர் இந்தச் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்புகளும் வழங்கப்பட்டன.
பேராறு பகுதியில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட பல வர்த்தக நிலையங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.
உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றனவா மற்றும் விற்பனை நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பன தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.
அண்மையில் நிலவும் மழையுடனான காலநிலை மாற்றங்களால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் ஒரு பகுதியாக, நோய்த்தொற்று அபாயம் காணப்படும் நபர்களுக்கு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்கும், தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோய் பரவும் அபாயம் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை - உணவகங்களில் தீவிர சோதனை நிலவும் மழையுடனான காலநிலை மாற்றங்களால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் ஒரு பகுதியாக, நோய்த்தொற்று அபாயம் காணப்படும் நபர்களுக்கு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டது.கந்தளாய் பேராறு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதாரத் துறையினர் நேற்று திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) டாக்டர் நசீர் அகமட் வழிகாட்டலின் கீழ், பொது சுகாதார பரிசோதகர் (PHI) அருள் மோகன் தலைமையிலான குழுவினர் இந்தச் சோதனைகளை மேற்கொண்டனர்.இதன்போது, எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்புகளும் வழங்கப்பட்டன.பேராறு பகுதியில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட பல வர்த்தக நிலையங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன. உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றனவா மற்றும் விற்பனை நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பன தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.அண்மையில் நிலவும் மழையுடனான காலநிலை மாற்றங்களால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் ஒரு பகுதியாக, நோய்த்தொற்று அபாயம் காணப்படும் நபர்களுக்கு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்கும், தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.