• Nov 26 2024

நாட்டில் வெறிநாய் நோய் அதிகரிக்கும் அபாயம்...! மக்களுக்கு எச்சரிக்கை...!

Sharmi / Mar 11th 2024, 9:59 am
image

நாட்டில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய வேலைத்திட்டம் இல்லாததால் வெறிநாய் நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி,  நாடு முழுவதும் ஆறு மில்லியனுக்கும் அதிகமான தெருநாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதுவதுடன் மேலும் இந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டமும் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் கொழும்பு மற்றும் பொது இடங்கள் உட்பட நாடு முழுவதும் ஏராளமான நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் நிலையில் தற்போது பாரிய சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெறிநோய் மற்றும் நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

எனினும், அவ்வாறான வேலைத்திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலைமையை முறையாகக் கட்டுப்படுத்த விஞ்ஞான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நாட்டில் வெறிநாய் நோய் அதிகரிக்கும் அபாயம். மக்களுக்கு எச்சரிக்கை. நாட்டில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய வேலைத்திட்டம் இல்லாததால் வெறிநாய் நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி,  நாடு முழுவதும் ஆறு மில்லியனுக்கும் அதிகமான தெருநாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதுவதுடன் மேலும் இந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டமும் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும் கொழும்பு மற்றும் பொது இடங்கள் உட்பட நாடு முழுவதும் ஏராளமான நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் நிலையில் தற்போது பாரிய சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வெறிநோய் மற்றும் நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.எனினும், அவ்வாறான வேலைத்திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்நிலைமையை முறையாகக் கட்டுப்படுத்த விஞ்ஞான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement