• Apr 20 2025

டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம்

Chithra / Apr 20th 2025, 10:34 am
image

தற்போது பெய்து வரும் மழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட, 

டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்குன்குனியா பரவுகிறது என்று கூறினார். 

நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, பலர் சுற்றுலா சென்றுள்ளதாகவும், தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யும் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

இதன் காரணமாக, நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யும் வாய்ப்பு காணப்படாததால், அவை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் ஒரே நுளம்பால் பரவுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், 

இதன் காரணமாக, சுற்றுப்புறத்தை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்பு பெருக்கத்தைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.


டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் தற்போது பெய்து வரும் மழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட, டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்குன்குனியா பரவுகிறது என்று கூறினார். நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, பலர் சுற்றுலா சென்றுள்ளதாகவும், தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யும் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக, நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யும் வாய்ப்பு காணப்படாததால், அவை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் ஒரே நுளம்பால் பரவுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாக, சுற்றுப்புறத்தை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்பு பெருக்கத்தைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement