பிரதேசங்களின் அபிவிருத்திகள் மற்றும் காணி உரிமைகளை வழங்குதல் உள்ளிட்ட விசேட செயற்திட்டங்களை பிரதேச ரீதியாக திறம்பட முன்னெடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு உள்ளூர் ஆளுகை பகுதிகளிலும் இணைப்பாளர்களை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன..l
அதனடிப்படையில், கிழக்கு மாகாண ஆளுனரின் மூதூர் பிரதேசத்திற்கான விசேட ஒருங்கிணைப்பாளராக றியால் முகம்மது றிழ்வான் நேற்று, ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் உத்தியோகபூர்வமாக நியமனம் செய்யப்பட்டார்.
றியால் முகம்மது றிழ்வான் அவர்கள் இலங்கை ஆசிரிய சேவையில் நீண்ட காலமாக, ஆங்கில மொழி ஆசிரியராக பணியாற்றி வந்ததுடன், மனிதவள முகாமைத்துவத் துறையில் வணிக மேலாண்மை இளங்கலைப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இவர் கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் சமூக வலைத்தள இணைப்பாளராகப் பணியாற்றியதுடன், தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
மூதூர் பிரதேச சபையின் அபிவிருத்தி இணைப்பாளராக றிழ்வான் நியமனம் பிரதேசங்களின் அபிவிருத்திகள் மற்றும் காணி உரிமைகளை வழங்குதல் உள்ளிட்ட விசேட செயற்திட்டங்களை பிரதேச ரீதியாக திறம்பட முன்னெடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு உள்ளூர் ஆளுகை பகுதிகளிலும் இணைப்பாளர்களை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.lஅதனடிப்படையில், கிழக்கு மாகாண ஆளுனரின் மூதூர் பிரதேசத்திற்கான விசேட ஒருங்கிணைப்பாளராக றியால் முகம்மது றிழ்வான் நேற்று, ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் உத்தியோகபூர்வமாக நியமனம் செய்யப்பட்டார்.றியால் முகம்மது றிழ்வான் அவர்கள் இலங்கை ஆசிரிய சேவையில் நீண்ட காலமாக, ஆங்கில மொழி ஆசிரியராக பணியாற்றி வந்ததுடன், மனிதவள முகாமைத்துவத் துறையில் வணிக மேலாண்மை இளங்கலைப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.மேலும், இவர் கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் சமூக வலைத்தள இணைப்பாளராகப் பணியாற்றியதுடன், தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.