• Sep 03 2025

வெவ்வேறு பகுதிகளில் சாலை விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு - பொலிஸார் விசாரணை!

shanuja / Sep 2nd 2025, 4:21 pm
image

வெவ்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற சாலை விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


விபத்துக்கள் தொடர்பில் தெரிய வருகையில்,  


திஸ்ஸ-மாத்தறை பிரதான சாலையில்,மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற  பேருந்து மோதி விபத்து சம்பவித்துள்ளது. 


விபத்தில் ரன்னவைச் சேர்ந்த 79 வயது மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்ததாக  பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது.


காயமடைந்த  சாரதி  முதலில் ரன்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தங்கல்லே மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதும் உயிரிழந்தார். 


இதனையடுத்து பேருந்து  சாரதியைக்  கைது செய்த ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இதற்கிடையில், கல்பிட்டியில் நேற்று நடந்த விபத்தில் எட்டலையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.


எட்டலை சந்தியில் பாலவியாவிலிருந்து கல்பிட்டிக்குச் சென்ற ஒரு கார் மோதியதில் இளைஞன் உயிரிழந்ததாக  பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது.


விபத்தில் காயமடைந்தவர்  கல்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. 


அதனையடுத்து காரின்  சாரதி கைது செய்யப்பட்டார். விபத்து தொடர்பான மேலதிக  விசாரணைகளை கல்பிட்டி பொலிஸ்பிரவு  மேற்கொண்டு வருகிறது.

வெவ்வேறு பகுதிகளில் சாலை விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு - பொலிஸார் விசாரணை வெவ்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற சாலை விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கள் தொடர்பில் தெரிய வருகையில்,  திஸ்ஸ-மாத்தறை பிரதான சாலையில்,மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற  பேருந்து மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் ரன்னவைச் சேர்ந்த 79 வயது மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்ததாக  பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது.காயமடைந்த  சாரதி  முதலில் ரன்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தங்கல்லே மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதும் உயிரிழந்தார். இதனையடுத்து பேருந்து  சாரதியைக்  கைது செய்த ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், கல்பிட்டியில் நேற்று நடந்த விபத்தில் எட்டலையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.எட்டலை சந்தியில் பாலவியாவிலிருந்து கல்பிட்டிக்குச் சென்ற ஒரு கார் மோதியதில் இளைஞன் உயிரிழந்ததாக  பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது.விபத்தில் காயமடைந்தவர்  கல்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அதனையடுத்து காரின்  சாரதி கைது செய்யப்பட்டார். விபத்து தொடர்பான மேலதிக  விசாரணைகளை கல்பிட்டி பொலிஸ்பிரவு  மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement