• Feb 19 2025

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்

Chithra / Feb 14th 2025, 9:36 am
image


தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில்  எவ்வித பாதுகாப்பு சமிக்ஞையும் இன்றி நெல் உலரவிடுகின்றனர். இதனால் விபத்து சம்பவங்கள்  அதிகளவில் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் பாதுகாப்பு சமிக்ஞை இல்லாமல் நெல் உலரவிடப்பட்டதனால் கடந்த இரு தினங்களில் இருவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே அதனை கருத்தில் கொண்டு பொறுப்பான உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் பேசப்பட்டு, வீதியில் மூன்றில் ஒரு  பகுதியிலேயே  நெல் உலர்த்த முடியும் எனவும் இதனை பொலிஸார் கண்காணிப்பு செய்ய வேண்டும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் தற்போது சிறு வீதிகளிலும், வீதியின் அரைவாசி பகுதிகளிலும் அதற்கு மேற்பட்ட பகுதிகளிலும் நெல் உலரவிடப்பட்டு வருகின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது என எமது செய்தியாளர் தெரிவித்தார். 

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில்  எவ்வித பாதுகாப்பு சமிக்ஞையும் இன்றி நெல் உலரவிடுகின்றனர். இதனால் விபத்து சம்பவங்கள்  அதிகளவில் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் பாதுகாப்பு சமிக்ஞை இல்லாமல் நெல் உலரவிடப்பட்டதனால் கடந்த இரு தினங்களில் இருவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனவே அதனை கருத்தில் கொண்டு பொறுப்பான உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் பேசப்பட்டு, வீதியில் மூன்றில் ஒரு  பகுதியிலேயே  நெல் உலர்த்த முடியும் எனவும் இதனை பொலிஸார் கண்காணிப்பு செய்ய வேண்டும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சிறு வீதிகளிலும், வீதியின் அரைவாசி பகுதிகளிலும் அதற்கு மேற்பட்ட பகுதிகளிலும் நெல் உலரவிடப்பட்டு வருகின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது என எமது செய்தியாளர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement