• Feb 19 2025

தேசிய மக்கள் சக்தியின் எம்.பி பைசலின் சகோதரர் கைது!

Chithra / Feb 14th 2025, 9:48 am
image


கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் பாராளுமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கொஸ்வத்த, ஹல்தடுவன பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்தனர். 

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர், கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தியின் எம்.பி பைசலின் சகோதரர் கைது கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் பாராளுமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கொஸ்வத்த, ஹல்தடுவன பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர், கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement