காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துக்கு தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவது கூட உண்மையாக இருக்கலாம். எனவே இது குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2022இல் 14 மணித்தியாலங்கள் காணப்பட்ட மின் துண்டிப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறுத்தினார். ஆனால் இந்த அரசாங்கத்துக்கு ஓரிரு மணித்தியாலங்களில் ஏற்பட்ட சிக்கலைக் கூட முகாமைத்துவம் செய்ய முடியாதுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதற்கமைய இலங்கை, பங்களாதேஷ், பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் (யு.எஸ்.எயிட்) ஆட்சிகளில் குழப்பங்கள் ஏற்பட்டுத்தப்பட்டிருப்பது உண்மையெனில் அது மிகவும் பாரதூரமானதாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் எம்மைப் போன்ற சிறிய நாடுகளின் இறையான்மையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துக்கு தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவது கூட உண்மையாக இருக்கலாம்.
அவ்வாறில்லை எனில் திடீரென எவ்வாறு அத்தகையதொரு ஆர்ப்பாட்டம் தோற்றம் பெற்றது? எனவே இது குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
அதற்கமையவே ஐக்கிய தேசிய கட்சி , ஐக்கிய மக்கள் சக்திக்கிடையில் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.
எவ்வாறிருப்பினும் அதனை சீர்குலைக்கும் வகையிலும் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர் என்றார்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார் விசாரணை நடத்துமாறு கோரும் ரவி கருணாநாயக்க காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துக்கு தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவது கூட உண்மையாக இருக்கலாம். எனவே இது குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,2022இல் 14 மணித்தியாலங்கள் காணப்பட்ட மின் துண்டிப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறுத்தினார். ஆனால் இந்த அரசாங்கத்துக்கு ஓரிரு மணித்தியாலங்களில் ஏற்பட்ட சிக்கலைக் கூட முகாமைத்துவம் செய்ய முடியாதுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதற்கமைய இலங்கை, பங்களாதேஷ், பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் (யு.எஸ்.எயிட்) ஆட்சிகளில் குழப்பங்கள் ஏற்பட்டுத்தப்பட்டிருப்பது உண்மையெனில் அது மிகவும் பாரதூரமானதாகும். இவ்வாறான செயற்பாடுகள் எம்மைப் போன்ற சிறிய நாடுகளின் இறையான்மையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துக்கு தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவது கூட உண்மையாக இருக்கலாம். அவ்வாறில்லை எனில் திடீரென எவ்வாறு அத்தகையதொரு ஆர்ப்பாட்டம் தோற்றம் பெற்றது எனவே இது குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.இது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதற்கமையவே ஐக்கிய தேசிய கட்சி , ஐக்கிய மக்கள் சக்திக்கிடையில் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன. எவ்வாறிருப்பினும் அதனை சீர்குலைக்கும் வகையிலும் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர் என்றார்.