• Apr 15 2026

"மறுமலர்ச்சிக்கான பாதை" - வீதிகள் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!

shanu / Jan 30th 2026, 12:06 pm
image

"மறுமலர்ச்சிக்கான பாதை" எனும் தொனிப்பொருளின் கீழ் கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக யாழ் மாவட்டத்தில் பல்வேறு வீதிகள் செப்பனிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 


அந்த வகையில் நல்லூர் நாயன்மார் வீதியை காப்பற் வீதியாக செப்பனிடும் பணியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


''மறுமலர்ச்சிக்கான பாதை'' என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நல்லூர் நாயன்மார் வீதியினை காப்பற் வீதியாக செப்பனிடும்


ஆரம்ப நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் யாழ் மாநகரசபை உறுப்பினரும்,யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளருமான சுந்தரமூர்த்தி கபிலன்,பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இவ் வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.


1.2 கிலோ மீட்ட நீளமான நல்லூர் நாயன்மார் வீதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு 18 மில்லியன் ரூபா செலவில் செப்பனிடும் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


"மறுமலர்ச்சிக்கான பாதை" - வீதிகள் செப்பனிடும் பணிகள் ஆரம்பம் "மறுமலர்ச்சிக்கான பாதை" எனும் தொனிப்பொருளின் கீழ் கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக யாழ் மாவட்டத்தில் பல்வேறு வீதிகள் செப்பனிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் நல்லூர் நாயன்மார் வீதியை காப்பற் வீதியாக செப்பனிடும் பணியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.''மறுமலர்ச்சிக்கான பாதை'' என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நல்லூர் நாயன்மார் வீதியினை காப்பற் வீதியாக செப்பனிடும்ஆரம்ப நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.இந்நிகழ்வில் யாழ் மாநகரசபை உறுப்பினரும்,யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளருமான சுந்தரமூர்த்தி கபிலன்,பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இவ் வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.1.2 கிலோ மீட்ட நீளமான நல்லூர் நாயன்மார் வீதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு 18 மில்லியன் ரூபா செலவில் செப்பனிடும் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement