• Apr 28 2025

வன்னியில் ரவுடி அமைச்சர்! தட்டிக் கேட்பாரா ஜனாதிபதி? - கேள்வியெழுப்பிய சாணக்கியன் எம்.பி

Thansita / Apr 27th 2025, 3:16 pm
image

வன்னிமாவட்டத்தில் தேசியமக்கள் சக்தியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவை தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக்கூறுவாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

வடகிழக்கு தமிழ் மக்கள் ஓரணியாக நின்றால் மாத்திரமே எமக்கு நிரந்தரமான ஒரு அரசியல்தீர்வு இந்த நாட்டிலே வரும் என்ற நம்பிக்கையில் வாழமுடியும்.

இல்லை என்றால் பலமிழந்த ஒரு சமூகமாகவே நாங்கள் தொடர்ந்து இருப்போம். தமிழரின் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக தமிழரசுக்கட்சி மாத்திரே இன்று நேர்மையாக செயற்பட்டுவருகின்ற ஒரு கட்சி. அதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

எங்கள் பிரச்சனைகள் பற்றி சர்வதேச சமூகத்திடம் நாங்கள் மாத்திரமே குரல் கொடுக்கிறோம்.

அண்மையில் வருகை தந்த பாரத பிரதமரை நாம் சந்தித்தோம்.அவரை சந்திப்பதற்கு எமது கட்சியை சேர்ந்தவர்களும். மற்ற தமிழ்தேசிய பிரதிநிதிகளையும் மக்கள் பாராளுமன்றம் அனுப்பாவிட்டால் அவரை சந்திக்கும் அரசின் குழுவில் சிங்களவர்கள் மாத்திரமே அங்கம் வகித்தனர். அவர்கள் அந்த ரவுடி அமைச்சரையாவது கொண்டு போயிருக்கலாம்.

அண்மையில் முல்லைத்தீவில் மீனவ சங்கத்தலைர் மீது ரவுடி அமைச்சரின் கும்பல் பலமான தாக்குதலை செய்திருக்கின்றது. அவரது அடாவடித்தனத்தை காட்டியும் வன்னி மண்ணில் அடிவாங்காமல் போயுள்ளார் என்றார் அமைச்சர் என்ற பதவிக்கு அந்த மக்கள் மரியாதை கொடுத்துள்ளனர்.

இந்த ரவுடி அமைச்சரின் தலைவரான ஜனாதிபதி நேற்று மாங்குளம் சென்றிருந்தார். அங்கு ஒரு தொழிற்பேட்டை வலயம் ஒன்றை அமைப்பதாக சொல்லியிருக்கிறார்.

 ஆனால் பாராளுமன்றத்தில் வரவுசெலவு திட்ட விவாதத்தில் மாங்குளம் என்ற வார்த்தையே வரவில்லை.எனவே தேர்தலுக்காக சொல்லும் பொய் வார்த்தைகளே இவை.

சிங்களமக்களும் ஜனாதிபதி சொல்வது போல் ஒருதாய் பிள்ளைகளாக வாழலாம் என்ற மன நிலையில் இருப்பதாக நான் நம்பவில்லை.

 இனவாதிகளான கோட்டபாய அரசாங்கம் தங்களுடைய இனவாத பணியை சரியாக செய்யதவறியமையாலே இன்று இந்த இனவாதிகளுக்கு அந்த மக்கள் வாக்களித்துள்ளனர்.

கோட்டாவை விட மோசமான இனவாதிகள் இவர்கள். சிங்கள பேரினவாத நாடாக தொடர்ந்து இலங்கையை வைத்திருப்பதே அவர்களின் எண்ணம். அதற்கு தடையாக இருப்பவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்களே.

இதனை மக்கள் மனதிலே வைத்திருக்க வேண்டும். எதிர்வரும் தேர்தலில் அதனை வெளிப்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவு எமது கைகளுக்கு வந்தால் மாத்திரமே நாங்கள் செய்யும் போராட்டம் வலுவாக இருக்கும்.

வன்னி மாவட்டத்தில் தேசியமக்கள் சக்தியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் அரச ஊழியர்களாக இருந்த போது பெண்களுக்கான வாழ்வாதாரத்திட்டத்திற்காக வந்த நிதியை மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.விசாரணை செய்யப்பட்டுள்ளது.

இது போல பல விடயங்களை நான் பாராளுமன்றிலே தெரிவித்துள்ளேன். ரவுடியாக செயற்படும் அமைச்சர்கள் உள்ளனர். எனவே ஜனாதிபதி இதற்கெல்லாம் பொறுப்புக்கூறா விட்டால் இந்த தேர்தலில் இந்த அரசு தோல்வியடைவதை எவராலும் மாற்ற முடியாது. என்றார்.


வன்னியில் ரவுடி அமைச்சர் தட்டிக் கேட்பாரா ஜனாதிபதி - கேள்வியெழுப்பிய சாணக்கியன் எம்.பி வன்னிமாவட்டத்தில் தேசியமக்கள் சக்தியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவை தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக்கூறுவாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…வடகிழக்கு தமிழ் மக்கள் ஓரணியாக நின்றால் மாத்திரமே எமக்கு நிரந்தரமான ஒரு அரசியல்தீர்வு இந்த நாட்டிலே வரும் என்ற நம்பிக்கையில் வாழமுடியும்.இல்லை என்றால் பலமிழந்த ஒரு சமூகமாகவே நாங்கள் தொடர்ந்து இருப்போம். தமிழரின் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக தமிழரசுக்கட்சி மாத்திரே இன்று நேர்மையாக செயற்பட்டுவருகின்ற ஒரு கட்சி. அதற்கு பல உதாரணங்களை கூறலாம்.எங்கள் பிரச்சனைகள் பற்றி சர்வதேச சமூகத்திடம் நாங்கள் மாத்திரமே குரல் கொடுக்கிறோம்.அண்மையில் வருகை தந்த பாரத பிரதமரை நாம் சந்தித்தோம்.அவரை சந்திப்பதற்கு எமது கட்சியை சேர்ந்தவர்களும். மற்ற தமிழ்தேசிய பிரதிநிதிகளையும் மக்கள் பாராளுமன்றம் அனுப்பாவிட்டால் அவரை சந்திக்கும் அரசின் குழுவில் சிங்களவர்கள் மாத்திரமே அங்கம் வகித்தனர். அவர்கள் அந்த ரவுடி அமைச்சரையாவது கொண்டு போயிருக்கலாம்.அண்மையில் முல்லைத்தீவில் மீனவ சங்கத்தலைர் மீது ரவுடி அமைச்சரின் கும்பல் பலமான தாக்குதலை செய்திருக்கின்றது. அவரது அடாவடித்தனத்தை காட்டியும் வன்னி மண்ணில் அடிவாங்காமல் போயுள்ளார் என்றார் அமைச்சர் என்ற பதவிக்கு அந்த மக்கள் மரியாதை கொடுத்துள்ளனர்.இந்த ரவுடி அமைச்சரின் தலைவரான ஜனாதிபதி நேற்று மாங்குளம் சென்றிருந்தார். அங்கு ஒரு தொழிற்பேட்டை வலயம் ஒன்றை அமைப்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால் பாராளுமன்றத்தில் வரவுசெலவு திட்ட விவாதத்தில் மாங்குளம் என்ற வார்த்தையே வரவில்லை.எனவே தேர்தலுக்காக சொல்லும் பொய் வார்த்தைகளே இவை.சிங்களமக்களும் ஜனாதிபதி சொல்வது போல் ஒருதாய் பிள்ளைகளாக வாழலாம் என்ற மன நிலையில் இருப்பதாக நான் நம்பவில்லை. இனவாதிகளான கோட்டபாய அரசாங்கம் தங்களுடைய இனவாத பணியை சரியாக செய்யதவறியமையாலே இன்று இந்த இனவாதிகளுக்கு அந்த மக்கள் வாக்களித்துள்ளனர்.கோட்டாவை விட மோசமான இனவாதிகள் இவர்கள். சிங்கள பேரினவாத நாடாக தொடர்ந்து இலங்கையை வைத்திருப்பதே அவர்களின் எண்ணம். அதற்கு தடையாக இருப்பவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்களே.இதனை மக்கள் மனதிலே வைத்திருக்க வேண்டும். எதிர்வரும் தேர்தலில் அதனை வெளிப்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவு எமது கைகளுக்கு வந்தால் மாத்திரமே நாங்கள் செய்யும் போராட்டம் வலுவாக இருக்கும்.வன்னி மாவட்டத்தில் தேசியமக்கள் சக்தியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் அரச ஊழியர்களாக இருந்த போது பெண்களுக்கான வாழ்வாதாரத்திட்டத்திற்காக வந்த நிதியை மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.விசாரணை செய்யப்பட்டுள்ளது.இது போல பல விடயங்களை நான் பாராளுமன்றிலே தெரிவித்துள்ளேன். ரவுடியாக செயற்படும் அமைச்சர்கள் உள்ளனர். எனவே ஜனாதிபதி இதற்கெல்லாம் பொறுப்புக்கூறா விட்டால் இந்த தேர்தலில் இந்த அரசு தோல்வியடைவதை எவராலும் மாற்ற முடியாது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement