வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சியே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து பூந்தோட்டத்தில் பிரச்சார கூட்டம் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயகம் தேசிய கூட்டணியின் குடியிருப்பு வட்டார உறுப்பினரை ஆதரித்து இடம் பெற்ற இந்த கூட்டத்தில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று வட மாகாணத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சியே ஆகும். அவர்களின் செயற்பாடு தான் இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் உள்ள ஒரு ஜனாதிபதி இன்று உள்ளூராட்சி மன்றங்களையும் தங்களுக்கு தருமாறு கூறுவது எந்த வகையின் நியாயமாக இருக்கும். நாங்கள் எங்கள் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு உங்களோடு வாழ்வளுக்குமே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்கை அளித்து ஆதரிக்க வேண்டும்.
நாங்கள் எங்களுடைய தமிழ் கட்சிகளை ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் மக்களை பொருத்தவரையில் வாக்குச்சீட்டு என்பது வெறும் காகிதம் அல்ல.
அது பல வலிகளையும் வேதனைகளையும் சுமந்த ஒரு விடயம். இத்தனை ஆயிரம் போராளிகளையும் மக்களையும் இழந்து விட்டு இன்று தேசிய கட்சி ஒன்றின் பின்னால் செல்ல முடியாது. அவ்வாறு இருக்குமாக இருந்தால் எமது போராட்டம் வீணானதாக இருக்கும்.
வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சி -சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சியே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து பூந்தோட்டத்தில் பிரச்சார கூட்டம் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஜனநாயகம் தேசிய கூட்டணியின் குடியிருப்பு வட்டார உறுப்பினரை ஆதரித்து இடம் பெற்ற இந்த கூட்டத்தில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,இன்று வட மாகாணத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சியே ஆகும். அவர்களின் செயற்பாடு தான் இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்துள்ளது.நிறைவேற்று அதிகாரம் உள்ள ஒரு ஜனாதிபதி இன்று உள்ளூராட்சி மன்றங்களையும் தங்களுக்கு தருமாறு கூறுவது எந்த வகையின் நியாயமாக இருக்கும். நாங்கள் எங்கள் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு உங்களோடு வாழ்வளுக்குமே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்கை அளித்து ஆதரிக்க வேண்டும். நாங்கள் எங்களுடைய தமிழ் கட்சிகளை ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் மக்களை பொருத்தவரையில் வாக்குச்சீட்டு என்பது வெறும் காகிதம் அல்ல. அது பல வலிகளையும் வேதனைகளையும் சுமந்த ஒரு விடயம். இத்தனை ஆயிரம் போராளிகளையும் மக்களையும் இழந்து விட்டு இன்று தேசிய கட்சி ஒன்றின் பின்னால் செல்ல முடியாது. அவ்வாறு இருக்குமாக இருந்தால் எமது போராட்டம் வீணானதாக இருக்கும்.