• Jan 31 2026

தையல் பயிற்சி மற்றும் ஆரி பாடநெறி பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கல்!

shanuja / Jan 30th 2026, 5:16 pm
image

தையல் பயிற்சி மற்றும் ஆரி வேலைக்குரிய பாடநெறி பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சி மணியங்குளத்தில் அமைந்துள்ள ஜீவஊற்று அன்பின் கரம் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.

திறன் வளர்ச்சியும், உழைப்பிற்கான அங்கீகாரமும் பெற்றுத் தரும் வகையில் ஜீவஊற்று அன்பின் கரம் நிறுவனம் மற்றும் மிசன் மெயில் நிறுவனம் இணைந்து நடாத்திய தையல் பயிற்சி மற்றும் ஆரி பாடநெறி பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 60 மாணவிகளுக்கு சான்றிதழ்கள்  இதன்போது வழங்கப்பட்டன. அத்துடன் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் புதிய நிறுவன சீருடைகள் வழங்கப்பட்டன. 

குறித்த நிகழ்வில் நிறுவனத்தின் நிறுவன தலைவர் ஜோன்டயாளினி, உப தலைவர் சீலன், பிரதம விருந்தினராக பாஸ்ரர் நடராஜா சூசையப்பு மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள், ஜீவஊற்று அன்பின் கரம் நிறுவனம் மற்றும் மிசன் மெயில் நிறுவன , பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

.

தையல் பயிற்சி மற்றும் ஆரி பாடநெறி பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் தையல் பயிற்சி மற்றும் ஆரி வேலைக்குரிய பாடநெறி பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சி மணியங்குளத்தில் அமைந்துள்ள ஜீவஊற்று அன்பின் கரம் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.திறன் வளர்ச்சியும், உழைப்பிற்கான அங்கீகாரமும் பெற்றுத் தரும் வகையில் ஜீவஊற்று அன்பின் கரம் நிறுவனம் மற்றும் மிசன் மெயில் நிறுவனம் இணைந்து நடாத்திய தையல் பயிற்சி மற்றும் ஆரி பாடநெறி பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 60 மாணவிகளுக்கு சான்றிதழ்கள்  இதன்போது வழங்கப்பட்டன. அத்துடன் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் புதிய நிறுவன சீருடைகள் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வில் நிறுவனத்தின் நிறுவன தலைவர் ஜோன்டயாளினி, உப தலைவர் சீலன், பிரதம விருந்தினராக பாஸ்ரர் நடராஜா சூசையப்பு மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள், ஜீவஊற்று அன்பின் கரம் நிறுவனம் மற்றும் மிசன் மெயில் நிறுவன , பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement