மாதாந்த ஆன்மீக வெளியீடான ஞானச்சுடர் 337 வது இதழ் வெளியீடு இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் காலை 10:40 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக. பஞ்சபுராணம் ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து அமரத்துவமடைந்த இராசரத்தினம்,புவனேந்திரராசா அவர்களின் ஓராண்டை முன்னிட்டு அவருக்கான ஒருநிமிட ஆத்ம சாத்தி பிரார்த்தனை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து வெளியீட்டு உரையினை சைவப் புலவரும், ஓய்வு பெற்ற பிரதி கல்வி பன்னிப்பாளருமான, சு.தேவமனோகரன் நிகழ்த்தியதை தொடர்ந்து
மதிப்பீட்டுரையினை யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியம் தனபாலன் நிகழ்த்தனார்.
தொடர்ந்து ஞானச்சுடர் 337 வது இதழின் சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
உதவிகளாக யா/ கம்பர்மலை வித்தியாலயத்தில் தரம் - 10 இல் கல்வி கற்கும் உடுப்பிட்டி வடக்கு, கம்பர்மலையை சேர்ந்த மாணவனுக்கு 48,850 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்ட்துடன் பதுளை மாவட்டத்தை சேர்ந்த டயபரா தமிழ் மகா வித்தியாலயம், பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி பாடசாலைகளைச் சேர்ந்த சாதாரணதர மாணவர்களுக்கு பாடப் பயிற்சி வினாத்தாள்கள் 20,000 ரூபா நிதிச் செலவில் வழங்கப்பட்டன.
இதேவேளை கிழக்கு மாகாண அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலர் பிரிவிலுள்ள கோலாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 42 பெண் பிள்ளைகளுக்கு 80,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும், பிள்ளைகளின் ஏனைய தேவைகளுக்காக 50,000 ரூபா நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவைத் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் அச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
ஞான சுடர் மலர் வெளியீட்டு நிகழ்வு மாதாந்த ஆன்மீக வெளியீடான ஞானச்சுடர் 337 வது இதழ் வெளியீடு இன்று இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.இந்நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் காலை 10:40 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது.இதில் முதல் நிகழ்வாக. பஞ்சபுராணம் ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து அமரத்துவமடைந்த இராசரத்தினம்,புவனேந்திரராசா அவர்களின் ஓராண்டை முன்னிட்டு அவருக்கான ஒருநிமிட ஆத்ம சாத்தி பிரார்த்தனை இடம்பெற்றது.அதனை தொடர்ந்து வெளியீட்டு உரையினை சைவப் புலவரும், ஓய்வு பெற்ற பிரதி கல்வி பன்னிப்பாளருமான, சு.தேவமனோகரன் நிகழ்த்தியதை தொடர்ந்து மதிப்பீட்டுரையினை யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியம் தனபாலன் நிகழ்த்தனார்.தொடர்ந்து ஞானச்சுடர் 337 வது இதழின் சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.உதவிகளாக யா/ கம்பர்மலை வித்தியாலயத்தில் தரம் - 10 இல் கல்வி கற்கும் உடுப்பிட்டி வடக்கு, கம்பர்மலையை சேர்ந்த மாணவனுக்கு 48,850 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்ட்துடன் பதுளை மாவட்டத்தை சேர்ந்த டயபரா தமிழ் மகா வித்தியாலயம், பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி பாடசாலைகளைச் சேர்ந்த சாதாரணதர மாணவர்களுக்கு பாடப் பயிற்சி வினாத்தாள்கள் 20,000 ரூபா நிதிச் செலவில் வழங்கப்பட்டன.இதேவேளை கிழக்கு மாகாண அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலர் பிரிவிலுள்ள கோலாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 42 பெண் பிள்ளைகளுக்கு 80,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும், பிள்ளைகளின் ஏனைய தேவைகளுக்காக 50,000 ரூபா நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவைத் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் அச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்