• Jan 31 2026

வவுனியாவிலிருந்து புதிய சொகுசு சேவையினை முன்னெடுத்துள்ள இ .போ .ச

dorin / Jan 30th 2026, 9:16 pm
image

வவுனியாவில் இருந்து கொழும்பிற்கான புதிய சொகுசுபேருந்து சேவை ஒன்று இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலையினரால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துச்சேவை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 09.05க்கு புறப்பட்டு புத்தளம் வழியாக கொழும்பை சென்றடையும்.

வவுனியாசாலைக்கு சொந்தமாக சொகுசு பேருந்துகள் இல்லாத நிலையில் அனுராதபுரம் சாலைக்குசொந்தமான பேருந்தின் மூலம் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சேவையானது முதற்கட்டமாக ஒருவழிப்பாதை கொண்டதாக அமைந்துள்ளதுடன் வரும் காலங்களில் அது விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு ஒரு பயணிக்கு 1460 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் வவுனியா சாலையின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவிலிருந்து புதிய சொகுசு சேவையினை முன்னெடுத்துள்ள இ .போ .ச வவுனியாவில் இருந்து கொழும்பிற்கான புதிய சொகுசுபேருந்து சேவை ஒன்று இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலையினரால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த பேருந்துச்சேவை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 09.05க்கு புறப்பட்டு புத்தளம் வழியாக கொழும்பை சென்றடையும்.வவுனியாசாலைக்கு சொந்தமாக சொகுசு பேருந்துகள் இல்லாத நிலையில் அனுராதபுரம் சாலைக்குசொந்தமான பேருந்தின் மூலம் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த சேவையானது முதற்கட்டமாக ஒருவழிப்பாதை கொண்டதாக அமைந்துள்ளதுடன் வரும் காலங்களில் அது விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு ஒரு பயணிக்கு 1460 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இன்றைய ஆரம்ப நிகழ்வில் வவுனியா சாலையின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement