• Nov 28 2024

நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு - வேலைநிறுத்தம் நியாயமற்றது..! ஜகத் குமார சுட்டிக்காட்டு

Chithra / Feb 17th 2024, 9:30 am
image

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது. எனவே சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே​யே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் வேலை நிறுத்தங்களை மேற்கொள்வது நியாயமற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் பிரதிநிதிகளை தூற்றுவதால் மாத்திரம் நாட்டை கொண்டுச் செல்ல முடியாதெனவும், அரச அதிகாரிகள் செயல்திறனுடன் மக்களுக்கு சேவை வழங்க கடமைப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

சில நேரங்களில் அரச சேவைகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கும் அரசாங்க அதிகாரிகள் சிலரது செயல்திறனற்ற செயற்பாடுகளே காரணமாக உள்ளன.

அரசியல் அதிகாரத்துக்குள் காணப்படும் பிழைகளை அவர்கள் சுட்டிக்காட்டினாலும், உயர் மட்ட அதிகாரிகள் சிலர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றனர். 

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு அழைக்கப்படும் போதும் சில அதிகாரிகள் தமக்கு எவ்வித பொறுப்புக்களும் இல்லையென கூறி அழைப்பைப் புறக்கணிக்கின்றனர்.

சுயாதீன ஆணைக்குழுக்களும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையிலும் மக்கள் உரிமைகள் பெருமளவில் மீறப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு - வேலைநிறுத்தம் நியாயமற்றது. ஜகத் குமார சுட்டிக்காட்டு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது. எனவே சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில்  நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே​யே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் வேலை நிறுத்தங்களை மேற்கொள்வது நியாயமற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.மக்கள் பிரதிநிதிகளை தூற்றுவதால் மாத்திரம் நாட்டை கொண்டுச் செல்ல முடியாதெனவும், அரச அதிகாரிகள் செயல்திறனுடன் மக்களுக்கு சேவை வழங்க கடமைப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.சில நேரங்களில் அரச சேவைகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கும் அரசாங்க அதிகாரிகள் சிலரது செயல்திறனற்ற செயற்பாடுகளே காரணமாக உள்ளன.அரசியல் அதிகாரத்துக்குள் காணப்படும் பிழைகளை அவர்கள் சுட்டிக்காட்டினாலும், உயர் மட்ட அதிகாரிகள் சிலர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றனர். பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு அழைக்கப்படும் போதும் சில அதிகாரிகள் தமக்கு எவ்வித பொறுப்புக்களும் இல்லையென கூறி அழைப்பைப் புறக்கணிக்கின்றனர்.சுயாதீன ஆணைக்குழுக்களும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையிலும் மக்கள் உரிமைகள் பெருமளவில் மீறப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement