• Feb 11 2025

வவுனியா தெற்கு வலய பாடசாலைகளின் நிலமை தொடர்பில் ஆளுங்கட்சி நேரில் சென்று ஆராய்வு

Thansita / Feb 10th 2025, 10:40 pm
image

வவுனியா தெற்கு வலய பாடசாலைகளின் நிலமை தொடர்பில் பிரதி அமைச்சர் மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று நேரில் சென்று அவதானம் செலுத்தியுள்ளனர்.

அந்தவகையில், வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தர்மபால வித்தியாலயம், சிறி சுமண மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களும், நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம், அல் இக்பால் மகாவித்தியாலயம், பாவற்குளம் மகாவித்தியாலயம், அல் அமீன் மகாவித்தியாலயம், வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு ஆளும் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்  விஜயம் செய்திருந்தனர். இவர்களுடன் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தனும்  சென்றிருந்தார்.

இதன்போது பாடசாலை அதிபர், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி பாடசாலைகளின் தேவைப்பாடுகள், பௌதீக மற்றும் ஆளணி வளம் தொடர்பிலும் மாணவர்களது பிரச்சனைகள், ஆசிரியர்களது பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பாடசாலை வாளாகம் அதன் சூழல், மலசலகூட வசதி மற்றும் குடிநீர் வசதி என்பன தொடர்பாக நேரடியாக அவதானிக்கப்பட்டதுடன், அங்கு காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலைகளை பார்வையிட்ட பின், புதிய வரவு செலவுத் திட்டம் மற்றும் விசேட ஒதுக்கீடுகள் மூலம் குறித்த பாடசாலைகளில் இனங்காணப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.  


வவுனியா தெற்கு வலய பாடசாலைகளின் நிலமை தொடர்பில் ஆளுங்கட்சி நேரில் சென்று ஆராய்வு வவுனியா தெற்கு வலய பாடசாலைகளின் நிலமை தொடர்பில் பிரதி அமைச்சர் மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று நேரில் சென்று அவதானம் செலுத்தியுள்ளனர்.அந்தவகையில், வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தர்மபால வித்தியாலயம், சிறி சுமண மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களும், நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம், அல் இக்பால் மகாவித்தியாலயம், பாவற்குளம் மகாவித்தியாலயம், அல் அமீன் மகாவித்தியாலயம், வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு ஆளும் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்  விஜயம் செய்திருந்தனர். இவர்களுடன் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தனும்  சென்றிருந்தார்.இதன்போது பாடசாலை அதிபர், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி பாடசாலைகளின் தேவைப்பாடுகள், பௌதீக மற்றும் ஆளணி வளம் தொடர்பிலும் மாணவர்களது பிரச்சனைகள், ஆசிரியர்களது பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், பாடசாலை வாளாகம் அதன் சூழல், மலசலகூட வசதி மற்றும் குடிநீர் வசதி என்பன தொடர்பாக நேரடியாக அவதானிக்கப்பட்டதுடன், அங்கு காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.பாடசாலைகளை பார்வையிட்ட பின், புதிய வரவு செலவுத் திட்டம் மற்றும் விசேட ஒதுக்கீடுகள் மூலம் குறித்த பாடசாலைகளில் இனங்காணப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.  

Advertisement

Advertisement

Advertisement