• Nov 23 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு வேண்டாம் என கூறியிருந்தால், ரூபாவின் பெறுமதி வலுவிழந்திருக்கும் - ஜனாதிபதி தெரிவிப்பு!

Tamil nila / Jul 7th 2024, 9:19 pm
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு வேண்டாம் என கூறியிருந்தால், ரூபாவின் பெறுமதி வலுவிழந்திருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவின் அரசியல் பிரவேசத்திற்கு 27 வருட பூர்த்தியை முன்னிட்டு களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“மொட்டு கட்சியின் ஆதரவு வேண்டாம் என என்று கூறி சென்றிருக்கும் பட்சத்தில் இன்று என்ன நடந்திருக்கும். ரூபாவின் பெறுமதி 450 ரூபாயை விடவும் அதிகரித்து வலுவிழந்திருக்கும். எரிபொருள் இல்லை, தேங்காய் எண்ணெய் கூட இருந்திருக்காது.” என அவர் கூறினார்.

அத்துடன் அனைத்து கட்சிகளின் கூட்டங்களிற்கும் தனக்கு இன்று செல்ல முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

மேலும் “ஐக்கிய தேசியக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும். பொதுஜன பெரமுன கூட்டத்திலும் கலந்து கொள்ள முடியும். நேற்றிரவு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடனேயே இருந்தேன். எனக்கு தேவையென்றால், அந்த கூட்டத்திற்கும் என்னால் செல்ல முடியும். என்னை விரட்டியடிக்க யாரும் இல்லை.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு வேண்டாம் என கூறியிருந்தால், ரூபாவின் பெறுமதி வலுவிழந்திருக்கும் - ஜனாதிபதி தெரிவிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு வேண்டாம் என கூறியிருந்தால், ரூபாவின் பெறுமதி வலுவிழந்திருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவின் அரசியல் பிரவேசத்திற்கு 27 வருட பூர்த்தியை முன்னிட்டு களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.“மொட்டு கட்சியின் ஆதரவு வேண்டாம் என என்று கூறி சென்றிருக்கும் பட்சத்தில் இன்று என்ன நடந்திருக்கும். ரூபாவின் பெறுமதி 450 ரூபாயை விடவும் அதிகரித்து வலுவிழந்திருக்கும். எரிபொருள் இல்லை, தேங்காய் எண்ணெய் கூட இருந்திருக்காது.” என அவர் கூறினார்.அத்துடன் அனைத்து கட்சிகளின் கூட்டங்களிற்கும் தனக்கு இன்று செல்ல முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.மேலும் “ஐக்கிய தேசியக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும். பொதுஜன பெரமுன கூட்டத்திலும் கலந்து கொள்ள முடியும். நேற்றிரவு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடனேயே இருந்தேன். எனக்கு தேவையென்றால், அந்த கூட்டத்திற்கும் என்னால் செல்ல முடியும். என்னை விரட்டியடிக்க யாரும் இல்லை.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement