இந்த ஆண்டு காதலர் தினத்தில் பூ விற்பனையில் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக கொழும்பு பூ விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக விலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண நாட்களில் சிவப்பு ரோஜா 350 ரூபாவிற்கு விற்கப்படும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு அதன் விலை அதிகரித்துள்ளது.
2023 இல் ஒரு ரோஜா 600 ரூபாவாகவும், 2024 இல் 300 ரூபாவாகவும் இருந்தது.
தற்போது ஒரு பூச்செண்டு 2500 ரூபா முதல் 3000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், பெரிய பூச்செண்டுகள் 8000 ரூபா முதல் 12000 ரூபா வரை காணப்படுகின்றன.
பாரிய இணைய நிறுவனங்கள், உயர் மட்ட வாடிக்கையாளர்களைக் குறிவைத்து 50,000 ரூபா முதல் 75,000 ரூபா வரை அதிகமான விலையுள்ள பாரிய ரோஜா பூச்செண்டுகளை விற்பனை செய்கின்றன.
நுவரெலியா மற்றும் பதுளை பகுதிகளில் அறுவடை குறைவாக உள்ளதால், இந்தியாவிலிருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அதிக இறக்குமதி வரி மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைத்துள்ளதால், பூக்களை வாங்குவதை விட விலைகளை மட்டும் கேட்டுவிட்டுச் செல்வதையே அதிகம் காண முடிகிறது.
வழமையாக பெப்ரவரி மாதம் பூ விற்பனைக்குச் சிறந்த மாதமாக இருந்தாலும், இந்த ஆண்டு மோசமான விற்பனையே பதிவாகியுள்ளது.
வர்த்தகத்தை மேம்படுத்த சில கடைக்காரர்கள் தள்ளுபடி சலுகைகளை வழங்கினாலும், ஒட்டுமொத்த கேள்வி மந்தமாகவே உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
காதலர் தினத்தில் சிவப்பு ரோஜா விற்பனையில் ஏற்பட்ட நெருக்கடி இந்த ஆண்டு காதலர் தினத்தில் பூ விற்பனையில் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக கொழும்பு பூ விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதிக விலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. சாதாரண நாட்களில் சிவப்பு ரோஜா 350 ரூபாவிற்கு விற்கப்படும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு அதன் விலை அதிகரித்துள்ளது.2023 இல் ஒரு ரோஜா 600 ரூபாவாகவும், 2024 இல் 300 ரூபாவாகவும் இருந்தது.தற்போது ஒரு பூச்செண்டு 2500 ரூபா முதல் 3000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், பெரிய பூச்செண்டுகள் 8000 ரூபா முதல் 12000 ரூபா வரை காணப்படுகின்றன.பாரிய இணைய நிறுவனங்கள், உயர் மட்ட வாடிக்கையாளர்களைக் குறிவைத்து 50,000 ரூபா முதல் 75,000 ரூபா வரை அதிகமான விலையுள்ள பாரிய ரோஜா பூச்செண்டுகளை விற்பனை செய்கின்றன.நுவரெலியா மற்றும் பதுளை பகுதிகளில் அறுவடை குறைவாக உள்ளதால், இந்தியாவிலிருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.அதிக இறக்குமதி வரி மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைத்துள்ளதால், பூக்களை வாங்குவதை விட விலைகளை மட்டும் கேட்டுவிட்டுச் செல்வதையே அதிகம் காண முடிகிறது.வழமையாக பெப்ரவரி மாதம் பூ விற்பனைக்குச் சிறந்த மாதமாக இருந்தாலும், இந்த ஆண்டு மோசமான விற்பனையே பதிவாகியுள்ளது.வர்த்தகத்தை மேம்படுத்த சில கடைக்காரர்கள் தள்ளுபடி சலுகைகளை வழங்கினாலும், ஒட்டுமொத்த கேள்வி மந்தமாகவே உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.