• Feb 14 2026

ஊர்காவற்றுறை சுற்றுலாவிற்கு ஒரு முக்கிய மைல்கல்!

shanuja / Feb 13th 2026, 11:27 am
image

ஊர்காவற்றுறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க உருண்டி கோட்டை (Urundy Fort) மற்றும் கடவுக்கரை (Kayts Jetty) பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சி சாதகமாகி உள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நேற்று வடக்கு மாகாண சுற்றுலா துறையினர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையினர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் விளைவாக, அப்பகுதிகளில் நிலவும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.


புதிய ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள்: பயணிகளின் வசதிக்காக ஊர்காவற்றுறை கடவுக்கரை (Jetty) பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் மற்றும் சுத்தமான கழிவறைகள் உடனடியாக அமைக்கப்படவுள்ளன.


சுற்றுலா மேம்பாடு: உருண்டி கோட்டை பகுதியை மையமாகக் கொண்டு சுற்றுலா நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.


உடனடி நடவடிக்கை: இப்பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தமது முழுமையான ஒத்துழைப்பையும் சம்மதத்தையும் வழங்கியுள்ளனர்.

ஊர்காவற்றுறை சுற்றுலாவிற்கு ஒரு முக்கிய மைல்கல் ஊர்காவற்றுறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க உருண்டி கோட்டை (Urundy Fort) மற்றும் கடவுக்கரை (Kayts Jetty) பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சி சாதகமாகி உள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று வடக்கு மாகாண சுற்றுலா துறையினர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையினர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் விளைவாக, அப்பகுதிகளில் நிலவும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.புதிய ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள்: பயணிகளின் வசதிக்காக ஊர்காவற்றுறை கடவுக்கரை (Jetty) பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் மற்றும் சுத்தமான கழிவறைகள் உடனடியாக அமைக்கப்படவுள்ளன.சுற்றுலா மேம்பாடு: உருண்டி கோட்டை பகுதியை மையமாகக் கொண்டு சுற்றுலா நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.உடனடி நடவடிக்கை: இப்பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தமது முழுமையான ஒத்துழைப்பையும் சம்மதத்தையும் வழங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement